அமீரக செய்திகள்இந்திய செய்திகள்

அமீரகத்தில் இருக்கும் இந்திய மாணவர்களின் கவனத்திற்கு.. NEET தேர்வு குறித்து முக்கிய தகவல்..!

வளைகுடாவில் உள்ள THE INDIAN HIGH SCHOOL-இல் ஜூலை 17, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இந்தியாவின் நீட் (தேசியதகுதி நுழைவுத் தேர்வு) 2022 தேர்வுகளுக்கான மிகப்பெரிய மையமாகவும் முதன்மை மையங்களில் ஒன்றாகவும் உள்ளதுகடந்த ஆண்டு அமீரகத்தில் இருந்து 1,843 மாணவர்கள் இந்த மருத்துவ நுழைவுத் தேர்வு எழுத இந்த மையத்திற்குச் சென்றனர்.

இது குறித்து, இந்திய உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை நிர்வாக அதிகாரி புனித் எம்.கே.வாசு கூறுகையில், மருத்துவம் மற்றும் பராமரிப்புத் துறையானது, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் ஏற்பாடுகளை உன்னிப்பாகக் கண்காணிக்கும். அதே நேரத்தில் நிர்வாகம் மற்றும் போக்குவரத்து ஆதரவுக் குழு அனைத்து தளவாடங்கள், ஆதரவு மற்றும் அனைத்து கோவிட் தொடர்பான நெறிமுறைகள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கான போக்குவரத்து ஆகியவற்றை ஒருங்கிணைக்கும். இந்த பள்ளி துபாய் மெட்ரோ ஹூத் மெத்தா நிலையத்திற்கு மிக அருகில் உள்ளது

இந்த ஆண்டு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான NEET-க்கு 1,872,000 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில்1,064,000 பேர் பெண்கள், 807,000 பேர் ஆண்கள். சமீப ஆண்டுகளில் மருத்துவ நுழைவுத்தேர்வில் பெண்களின் எண்ணிக்கை1,000,000- தாண்டியது இதுவே முதல் முறையாகும். இந்த ஆண்டு மேலும் சுமார் 250,000 பேர் நீட் தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர்.

தேர்வு எழுதும் மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

தேர்வு எழுத வரும் மாணவர்கள், தங்களின் அட்மிட் கார்டுகளை பதிவிறக்கம் செய்து, அதன் பிரிண்ட் எடுத்து வர வேண்டும்

தேர்வுக் கூடத்தில், மாணவர்கள் நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து சமூக இடைவெளி வழிகாட்டுதல்களையும்கடைப்பிடிக்க வேண்டும்

தேர்வு எழுதும் மாணவர்கள் சானிடைசர் மற்றும் டிரான்ஸ்பரண்ட் தண்ணீர் பாட்டில் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்

அனைத்து மாணவர்களும் உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றவேண்டும்.

தேர்வு மையத்தில் மருத்துவக் குழு மற்றும் செவிலியர்கள் பணியில் இருப்பார்கள்.

உடல் வெப்பநிலையை சரிபார்க்க பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அனைத்து மாணவர்களையும் திரையிட மெட்டல் டிடெக்டர் சிசிடிவி கேமராக்கள் பயன்படுத்தப்படும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!