அமீரக செய்திகள்

UAE: துபாயில் 10 ஆண்டுக்கும் மேலாக கூலி தொழில்.. ஒரே நாளில் லட்சாதிபதியான இந்தியர்..!

இந்தியாவைச் சேர்ந்த ராம்நாகினா என்பவர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக துபாயில் கூலி தொழில் செய்து வருகிறார். கூலி தொழில் செய்து வரும் ராம்நாகினாவுக்கு அசத்தலான அதிர்ஷ்டம் ஒன்று அடித்துள்ளது. 44 வயதான ராம் நாகினாவுக்கு, கடந்த சில நடைபெற்ற மஹ்சூஸ் டிராவின் 86வது வாரத்தில் பரிசுத் தொகையை வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு 1 லட்சம் திர்ஹம்ஸ் பரிசாக கிடைத்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 21 லட்சத்திற்கும் மேல் ஆகும்.

இரண்டு குழந்தைகளின் தந்தையான ராம்நாகினா, கடந்த 10 வருடங்களாக துபாயில் பணி செய்து வந்துள்ளார். தற்போது லாட்டரியில் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றுள்ளதால், மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கூறிய ராம்நாகினா, “எனக்கு சிறந்த அதிர்ஷ்டம் ஒன்று கிடைத்துள்ளது. மஹ்சூஸ் டிரா குறித்து என்னுடன் பணியாற்றும் சக தொழிலாளர்கள் என்னிடம் தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக, கடந்த ஜனவரி மாதம் முதல், நான் தொடர்ந்து இதில்ச்பங்கேற்று வருகிறேன். ஆனால், இவ்வளவு பெரிய ஒரு பரிசு தொகையை நான் வீட்டிற்கு எடுத்து செல்வேன் என்று நினைத்துப் பார்த்தது இல்லை. இந்த பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்பதை நான் முடிவு செய்யவில்லை. எனது வாழ்க்கையை மாற்றிய மஹ்சூஸ் டிராவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என ராம்நாகினா குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!