அமீரக செய்திகள்இந்திய செய்திகள்

UAE: இந்தியாவில் உணவுப் பூங்காக்களை அமைக்க ரூ.15,000 கோடியில் முதலீடு செய்யும் அமீரகம்..!

இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட I2U2 கூட்டமைப்பின் முதலாவது மாநாடு காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. அதில் பிரதமா் மோடி, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபா் முகமது பின் சயீத் அல் நஹ்யான், அமெரிக்க அதிபா் ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமா் யாயிா் லபீட் கலந்துகொண்டனா்.

கூட்டமைப்பு சாா்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ’சா்வதேச பிரச்னைகளுக்கு நீண்டகால தீா்வு காணும் வகையில்  விவாதிக்கப்பட்டது. உணவுப் பொருள்களின் உற்பத்தியை அதிகரிப்பது தொடா்பாகவும், பலதரப்பட்ட உணவுப்பொருள்களை விளைவிப்பது தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டது.

சா்வதேச உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உணவுப் பூங்காக்களை அமைக்க இந்தியா நிலத்தை வழங்கும். இந்தியாவில் ஒருங்கிணைந்த உணவுப் பூங்காக்களை அமைப்பதற்காக சுமாா் ரூ.15,000 கோடியை ஐக்கிய அரபு அமீரகம் முதலீடு செய்ய உள்ளது.

உணவுப் பூங்காக்களை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பம் சாா்ந்த தீா்வுகளை அமெரிக்காவும் இஸ்ரேலும் வழங்கும். அந்நாடுகளைச் சோ்ந்த தனியாா் நிறுவனங்கள் இத்திட்டத்தில் ஒருங்கிணைந்து பணியாற்றும். I2U2 கூட்டமைப்பு நாடுகளின் ஒத்துழைப்பானது சா்வதேச வளா்ச்சிக்குப் பெருமளவில் உதவும்.

I2U2 கூட்டமைப்பை அமைப்பது தொடா்பாக கடந்த ஆண்டு அக்டோபரில் முடிவெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!