அமீரக செய்திகள்

UAE: வாகனங்கள் டெய்ல் கேட்டிங் செய்தால் 400 திர்ஹம் அபராதம், 4 ப்ளாக் பாய்ண்ட்ஸ்..!! எச்சரிக்கும் காவல்துறை..!!

எமிரேட்டில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு, வாகனங்களுக்கு இடையில் பாதுகாப்பான தூரத்தை பராமரிக்குமாறும், எச்சரிக்கையுடன் வாகனம் ஓட்டுமாறும் வாகன ஓட்டிகளை வலியுறுத்தி ராஸ் அல் கைமா காவல்துறையினர் ஒரு புதிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.

மேலும், இந்த பிரச்சாரம் ‘கவனமாக சென்று பாதுகாப்பான தூரத்தை கடைபிடியுங்கள் (Drive with caution and leave a safe distance)’ என்ற ஸ்லோகன் உடன் தொடங்கப்பட்டுள்ளது. இது எமிரேட்டில் போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், சாலைகளில் பாதுகாப்பான பயணத்தை உறுதியளிப்பதற்கும் ராஸ் அல் கைமா காவல்துறையின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

அத்துடன் வாகனங்களுக்கு இடையே பாதுகாப்பான தூரத்தை பராமரிப்பது பற்றிய விழிப்புணர்வு வீடியோ ஒன்றினை ராஸ் அல் கைமா காவல்துறை இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்ட வீடியோவில், வாகனங்களுக்கிடையேயான பாதுகாப்பான தூரம் 5 மீ முதல் 10 மீ வரை இருப்பதையும், வேகம் அதிகரிக்கும் போது தூரம் 5 மீ அதிகரிப்பதையும் பார்க்கலாம்.

இதுபோல, சாலைகளில் போதுமான தூரத்தை கடைபிடிக்காத வாகன ஓட்டிகளுக்கு 400 திர்ஹம் அபராதமும், 4 ட்ராபிக் பாயிண்டுகளும் விதிக்கப்படும் என்பதையும் வீடியோ வாயிலாக வாகன ஓட்டிகளுக்கு நினைவூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!