அமீரக செய்திகள்

அமீரகத்தில் உங்கள் காரை மாற்றியமைக்க போறீங்களா..? அப்போ இந்த அபராதங்களை தவிர்த்துக்கொள்ளுங்க..!

அமீரகத்தில் உங்களது காரில் உள்ள ஜன்னல்களை டின்ட் ஸ்டிக்கர் ஒட்டவோ அல்லது சில அம்சங்களை மாற்றவோ நீங்கள் திட்டமிட்டிருந்தால் அவை அமீரக போக்குவரத்துச் சட்டத்திற்குள் இருப்பதை உறுதி செய்வது அவசியமாகும்.

அமீரக போக்குவரத்துச் சட்டத்தின்படி, போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் விதிகள் மற்றும் நடைமுறைகள் குறித்த 2017 ஆம் ஆண்டிற்கான தீர்மானம் எண் (178) படி, உடைந்த பின்புற விளக்குடன் வாகனம் ஓட்டுவது அல்லது முன் அனுமதியின்றி உங்கள் காரில் மாற்றங்களைச் செய்வது அபராதம் மற்றும் பிளாக் மார்க்குக்கு வழிவகுக்கும். சில சமயங்களில் வாகனம் பறிமுதல் செய்யவும் வாய்ப்புள்ளது.

வாகனத்தை ஆல்டர் செய்ய திட்டமிடுவோரின் கவனத்திற்கு:

  • சட்டத்திற்குப் மாறாக டின்ட் ஆடிக்கர் ஒட்டுதல்.

கார் கண்ணாடிகளில் டின்ட் ஸ்டிக்கர் ஒட்ட் அனுமதிக்கப்பட்ட சதவீதத்தை தாண்டினாலோ, டாக்சிகள் மற்றும் டிரக்குகள் டின்ட் ஸ்டிக்கர் ஒட்டினாலோ 1,500 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்.

  • வாகன ஆல்டர் மற்றும் இயந்திரம் மாற்றியமைத்தல்.

அமீரக போக்குவரத்துச் சட்டத்தின்படி, தங்கள் வாகனத்தை ஆல்டர் செய்தாலோ, இயந்திரத்தை மாற்றியமைத்தாலோ அதன் பிறகு சோதனைக்கு செல்ல வேண்டும், இதனை மீறினால் 400 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்.

  • வாகனத்தின் நிறத்தை சட்டவிரோதமாக மாற்றுதல்.

உங்கள் வாகனத்தின் நிறத்தை மாற்ற திட்டமிட்டால், காவல்துறை அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். உங்கள் காரின் நிறம் முன்பு வெண்மையாக இருந்திருந்தால், காவல்துறை அதிகாரிகளிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற்று, நீங்கள் சிவப்பு நிறத்திற்கு மாற்றினால் 800 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும். மேலும், அமீரகத்தில் உள்ள கார் பழுது பார்க்கும் கடைகள் காவல்துறை அதிகாரியிடம் இருந்து NOC பெறும் வரை வாகனத்தின் நிறத்தை மாற்றாது.

Related Articles

Back to top button
error: Content is protected !!