அமீரக செய்திகள்

UAE: விசிட், ரெசிடென்ஸி விசாக்களின் ஓவர்ஸ்டே அபராதத்திற்கான புதிய பட்டியலை வெளியிட்ட அரசு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டவர் ஒருவர் தனது விசா காலத்தையும் தாண்டி அமீரகத்தில் தொடர்ந்து தங்கினால் அபராதம் விதிக்கப்படும் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். அதில் அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் போர்ட் பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையமானது, நாட்டில் ஓவர்ஸ்டே (overstay) என கூறப்படும் விசா காலத்தையும் தாண்டி தங்கியிருப்பவர்களுக்கான புதிய அபராதப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில் விசா காலத்தைத் தாண்டி தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் விசிட் விசா வைத்திருப்பவர்கள் ஒரு நாளைக்கு 100 திர்ஹங்களுக்குப் பதிலாக இனி 50 திர்ஹம் அபராதக் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரெசிடென்ஸ் விசா காலாவதியாகி ஓவர்ஸ்டேயில் தங்கியிருப்பவர்கள் இருமடங்காக, அதாவது, ஒரு நாளைக்கு 25 திர்ஹம்களுக்குப் பதிலாக 50 திர்ஹம் கட்டணம் இனி செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள டைப்பிங் சென்டர் ஏஜென்ட்களும் இந்த கட்டண மாற்றத்தை உறுதி செய்துள்ளனர். “விசிட் விசா மீதான அபராதம் 100 திர்ஹாமில் இருந்து 50 திர்ஹமாக குறைக்கப்பட்டுள்ளது. ரெசிடென்ஸ் விசா மீதான அபராதம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது” என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட விசா சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக இந்த மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த அக்டோபர் 3 அன்று அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் போர்ட் பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையம் அமீரகத்திற்கான புதிய விசா திட்டத்தின் விதிகள் மற்றும் நடைமுறைகளை அறிமுகப்படுத்தியது. இதில் பல புதிய விசாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!