அமீரக செய்திகள்

8,000 திர்ஹம்ஸ் பரிசுத்தொகை எமிரேட்ஸ் வழங்குவதாக இணையத்தில் வரும் ப்ரொமோஷன்.. அதிகாரிகள் எச்சரிக்கை..!!

துபாயை மையமாக கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மக்களிடம் மோசடி செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “Emirates 37th Anniversary Transportation Subsidy” என்ற பெயரில் போலியான ப்ரொமோஷன் மூலம் மக்களை ஈர்த்து அவர்களது தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்படுவதும் தெரியவந்துள்ளது. எனவே, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற பெயரில் 8,000 Dh ரொக்கப் பரிசு வழங்குவதாகக் கூறும் போலியான இணையப் பக்கத்தை அணுக வேண்டாம் என்று பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெரிவிக்கையில் இணையத்தில் பரவும் ப்ரொமோஷன் போலியானது என்றும் அது விமான நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பக்கம் இல்லை என்றும் எமிரேட்ஸ் செய்தித் தொடர்பாளர் செவ்வாய் கிழமை ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார். இத்தகைய ப்ரொமோஷன் விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ போட்டி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோசடியில் ஆரம்பத்தில், எமிரேட்ஸ் விமான நிறுவனத்தைப் பற்றிய அவர்களின் கருத்துகள்கேட்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பின்னர் அதில் உள்ள கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு பயனர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. பயனர்களிடம் கேட்கப்படும் கேள்விகளில் அவர்களின் வயது மற்றும் பாலினம் குறித்தும் கேட்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

தகவலின்படி, பயனர்கள்  கேள்வித்தாளில் அவர்கள் அளித்த பதில்களுக்கு வெகுமதியாக பரிசுகளை வெல்வதற்காக கிஃப்ட் பாக்ஸை கிளிக் செய்ய மூன்று வாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும், இரண்டாவது அல்லது மூன்றாவது வாய்ப்பில் பயனர் 8,000 திர்ஹம்களை வெற்றி பெற்றதாகவும் காண்பிக்கப்படுகின்றன.

ஆனால், பயனர் அந்த ரொக்கப் பரிசைப் பெற வேண்டுமென்றால் மற்றவர்களுக்கு அந்த லிங்கைப் பகிர வேண்டும் என்று கூறுகிறது. பின்னர் பயனர்கள் உள்ளிடும் மொபைல் எண்களுக்கு ஒரு நாளைக்கு 3.25 Dhக்கு கேமிங் சேவைக்கான சந்தாவை உறுதிசெய்ய மொபைலுக்கு OTP (ஒரு முறை கடவுச்சொல்) அனுப்பப்படும். இவ்வாறு அடிக்கடி மோசடி செய்யப்பட்டு வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

இவ்வாறான மோசடி செயல்களை நம்ப வேண்டாம் என்றும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகள் நீல நிற டிக் மூலம் குறிக்கப்பட்டுள்ளன என்றும் எமிரேட்ஸின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!