அமீரக செய்திகள்

UAE: டிரைவிங் லைசென்ஸ், வாகனம் உரிமம் என 30க்கும் மேற்பட்ட சேவைகளை வழங்கும் நடமாடும் காவல் நிலையம்..!!

ஷார்ஜா காவல்துறையின் நடமாடும் காவல் நிலையம் (mobile police station), எமிரேட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சமூக உறுப்பினர்களுக்கு 35க்கும் மேற்பட்ட குற்றவியல் மற்றும் போக்குவரத்து சேவைகளை வழங்க அதன் திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தவும், வாடிக்கையாளர்கள் எளிதாகவும் வசதியாகவும் விரைவான சேவைகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ள நடமாடும் காவல்துறையானது மூலோபாய பங்காளிகளின் (strategic partners) ஒத்துழைப்புடன் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், இந்த நடமாடும் காவல்நிலையத்தில் கண் பரிசோதனை மற்றும் வாகன ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற 13 சேவைகளை பெற முடியும் என கூறப்பட்டுள்ளது. அதுபோல, வாகனப் பரிசோதனை, வாகன உரிமம் வழங்குதல் மற்றும் மறுபதிவு செய்தல், புதுப்பித்தல் மற்றும் வாகன உரிமத்தை மாற்றுதல் உள்ளிட்ட 14 சேவைகளையும் வழங்குவதாகக் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், ஷார்ஜா காவல் நிலையங்களுக்கான குற்றச் சேவைகளின் தொகுப்பான கிரிமினல் அறிக்கைகளைத் திறப்பது, அது சம்பந்தப்பட்டவர்களுக்குச் சான்றிதழை வழங்குவது அல்லது அறிக்கையின் நிலையை நிரூபிப்பது போன்றவற்றையும் நடமாடும் காவல் நிலையம் உள்ளடக்கியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட நடமாடும் காவல்நிலையத்தின் சேவைகள் எதிர்வரும் மார்ச் மாதம் வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஷார்ஜாவில் உள்ள அல் பதாயர், கல்பா, மலிஹாவில் உள்ள ஹெரிட்டேஜ் வில்லேஜ் (heritage village), அமீரகத்தில் உள்ள அரசு துறைகளான அல் தைத் எக்ஸ்போ, புறநகர் கவுன்சில் அல் நூஃப் மற்றும் அல் ஹம்ரியா சொசைட்டி மற்றும் டிப்பா பிராந்தியம் போன்ற இடங்களில் இந்த நடமாடும் காவல் நிலையம் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!