அமீரக செய்திகள்

மீலாது நபியை முன்னிட்டு தனியார் துறைக்கு பொது விடுமுறை அறிவித்த அமீரகம்..!!

அமீரகத்தில் வரவிருக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாளான மீலாது நபியை முன்னிட்டு வரும் அக்டோபர் 8-ம் தேதி சனிக்கிழமை அன்று தனியார் துறையினருக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) அறிவித்துள்ளது.

வளைகுடா நாடுகள் உட்பட பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில், இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதமான ரபி அல்-அவ்வல் மாதத்தின் 12ம் தேதி அன்று முஹம்மது நபியின் பிறந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

இந்த விடுமுறையினால் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை பெறுபவர்களுக்கு பலன் இல்லை என்றாலும், சனிக்கிழமைகளில் வேலை செய்பவர்களுக்கு இது இரண்டு நாட்கள் தொடர் விடுமுறையை அளிக்கின்றது.

இந்த பொது விடுமுறையைத் தொடர்ந்து அமீரக தியாகிகள் நினைவு தினம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினத்தின் நினைவாக டிசம்பர் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் விடுமுறை அளிக்கப்படும். அதனையடுத்து டிசம்பர் 4 ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஆண்டின் கடைசியில் நான்கு நாட்கள் தொடர் விடுமுறையை குடியிருப்பாளர்கள் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களின் செய்திகளை #Youtube வழியாகவும் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் @khaleejtamil என்ற #Youtube பக்கத்தை #Subscribe செய்து கொள்ளுங்கள்.

Related Articles

Back to top button
error: Content is protected !!