அமீரக செய்திகள்

ரமலான் மாதத்தில் எந்தெந்த நேரங்களில் மருத்துவ வசதிகளை அணுகலாம்? அபுதாபி வெளியிட்டுள்ள விவரங்கள்…

அபுதாபி ஹெல்த் சர்வீசஸ் நிறுவனம் (Seha) அபுதாபி முழுவதும் உள்ள மருத்துவமனைகள், மெடிக்கல் மற்றும் சுகாதார மையங்கள் இந்த ரமலான் மாதத்தில் செயல்படும் நேரம் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. எனவே, குடியிருப்பாளர்கள் அதற்கேற்றவாறு இந்த மையங்களை அணுகலாம் என கூறப்பட்டுள்ளது.

ஷேக் கலீஃபா மெடிக்கல் சிட்டி, ஷேக் ஷக்பூத் மெடிக்கல் சிட்டி, கார்னிச் மருத்துவமனை, தவாம், அல் தஃப்ரா, அல் ரஹ்பா மற்றும் அல் அய்ன் மருத்துவமனைகளில் சேஹாவின் அவசர சிகிச்சைப் பிரிவுகள் 24 மணி நேரமும் செயல்படும். இவற்றில் அல் ரஹ்பா அவசர சிகிச்சை மையம் மட்டும் வாரத்தில் ஏழு நாட்களும் 14:00 முதல் 02:00 வரை செயல்படும்.

மருத்துவமனைகள்:

>> ஷேக் கலீஃபா மெடிக்கல் சிட்டி, கார்னிச், Behavioral Sciences Pavilion மற்றும் அல் ரஹ்பா மருத்துவமனை ஆகியவற்றில் வெளிநோயாளர் சிறப்பு கிளினிக்குகள் திங்கள் முதல் வியாழன் வரை 09:00 முதல் 15:00 வரை மற்றும் 21:00 முதல் 01:00 வரையிலும், வெள்ளிக்கிழமைகளில் 09:00 முதல் 13.00 வரையிலும் செயல்படும். இதில் கார்னிச் மருத்துவமனையின் வெளிநோயாளர் கிளினிக்குகள் மற்றும் மகளிர் சுகாதார மையம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படும். அதேசமயம், SBR (மஞ்சள் காமாலை) கிளினிக் சனிக்கிழமைகளில் 09:00 முதல் 15:00 வரை மட்டுமே திறந்திருக்கும்.

>> ஷேக் ஷக்பூத் மெடிக்கல் சிட்டியில், கிளினிக்குகள் திங்கள் முதல் வியாழன் வரை 09:00 முதல் 15:00 வரை மற்றும் 21:00 முதல் 01:00 வரை, மற்றும் 09:00 முதல் 13:00 வரையிலும், வெள்ளிக்கிழமைகளில் 21:00 முதல் 01:00 வரையிலும் செயல்படும். மேலும், இங்குள்ள ஊசி மற்றும் டிரஸ்ஸிங் கிளினிக் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 09:00 முதல் 15:00 வரை திறந்திருக்கும்.

>> தவாம் மருத்துவமனை மற்றும் அல் அய்ன் மருத்துவமனையில் உள்ள வெளிநோயாளர் கிளினிக்குகள் திங்கள் முதல் வியாழன் வரை 9:00 முதல் 15:00 வரை, வெள்ளிக்கிழமை 08:30 முதல் 12:30 வரை செயல்படுகின்றன, மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படும். அல் அய்ன் மருத்துவமனையில் மறுவாழ்வு மையம் திங்கள் முதல் வியாழன் வரை 08:00 முதல் 16:00 வரை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 08:00 முதல் 13:00 வரை செயல்படும். அல் அய்னில் உள்ள சிறுநீரக பராமரிப்பு மையம் திங்கள் முதல் சனிக்கிழமை வரை 08:00 முதல் 12:00 வரை இயங்குகிறது மற்றும் ஞாயிற்றுக்கிழமை மூடப்படும்.

சுகாதார நிலையம்:

அபுதாபியில் உள்ள ஆம்புலேட்டரி ஹெல்த்கேர் சர்வீசஸ் ஹெல்த்கேர் சென்டர் வேலை நேரங்கள் பியூர் ஹெல்த் நிறுவனத்தின் வெளிப்புற சிகிச்சை சேவைகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.

>> அல் ஜஃபரானா டயோக்னாஸ்டிக் மற்றும் மஸ்கிரீனிங் சென்டர், அல் பஹியா ஹெல்த்கேர் சென்டர் மற்றும் பனியாஸ் ஹெல்த்கேர் சென்டர் ஆகியவை திங்கள் முதல் வெள்ளி வரை 09:00 முதல் 16:00 வரையிலும் 20:00 முதல் 01:00 வரையிலும் இயங்கும், மேலும் சனிக்கிழமை 20:00 முதல் 01:00 வரை செயல்படுவதுடன் ஞாயிற்றுக்கிழமை 09:00 முதல் 16:00 வரை மற்றும் 20:00 முதல் 01:00 வரை இயங்கும்.

>> மேலும், மதீனத் கலீஃபா ஹெல்த்கேர் சென்டர், அல் மஃப்ராக் டென்டல் சென்டர், அல் பதீன் ஹெல்த்கேர் சென்டர், அல் ஃபலாஹ் ஹெல்த்கேர் சென்டர், மதீனத் முகமது பின் சயீத் ஹெல்த்கேர் சென்டர், அல் ஷம்கா ஹெல்த்கேர் சென்டர், அல் தஃப்ரா டென்டல் சென்டர், அல் முஷ்ரிஃப் குழந்தைகள் சிறப்பு மையம் மற்றும் அல் மக்தா ஹெல்த்கேர் சென்டர் போன்ற அனைத்தும் சனிக்கிழமை தவிர்த்து திங்கள் முதல் வெள்ளி வரை 09:00 முதல் 16:00 வரை மற்றும் 20:00 முதல் 1:00 வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் 20:00 முதல் 1:00 வரையிலும் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

விசா ஸ்கிரீனிங் சென்டர்கள்:

>> அபுதாபியில் விசா ஸ்கிரீனிங் மையங்களில் பெரும்பாலானவை திங்கள் முதல் வெள்ளி வரை 08:00 முதல் 17:00 வரை மற்றும் ஞாயிறு 09:00 முதல் 16:00 வரை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அல் முசாஃபா மற்றும் அல் அய்ன் மையங்கள் திங்கள் முதல் வெள்ளி வரை 08:00 முதல் 16:00 வரை மற்றும் ஞாயிறு 09:00 முதல் 16:00 வரை செயல்படும்.

>> ஷஹாமா, பனி யாஸ், மதீனத் சயீத் சிட்டி மற்றும் கயாத்தி ஆகிய இடங்களில் உள்ள விசா ஸ்கிரீனிங் மையங்கள் திங்கள் முதல் வெள்ளி வரை 08:00 முதல் 15:00 வரை செயல்படும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படும்.

>> நுக்பா மற்றும் டாப் பிரஸ்டீஜ் மையங்களில் விசா ஸ்க்ரீனிங் வாரத்தில் 7 நாட்கள் 09:00 முதல் 15:00 வரை இயங்கும்.முஷ்ரிஃப் மற்றும் வஹ்தா மாலில் உள்ள விசா ஸ்கிரீனிங் மையங்கள் திங்கள் முதல் ஞாயிறு வரை 10:00 முதல் 14:00 வரை மற்றும் 21:00 முதல் 12:00 வரை செயல்படும்.

சிறப்பு பல் கிளினிக்குகள்:

>> ஞாயிற்றுக்கிழமைகளில் 20:00 முதல் 01:00 வரை, மற்றும் திங்கள் முதல் வெள்ளி வரை 09:00 முதல் 16:00 வரை மற்றும் 20:00 முதல் 01:00 வரை பல் பராமரிப்புக்காக அல் தஃப்ரா மற்றும் அல் மஃப்ராக் ஆகிய இரண்டிலும் சிறப்பு பல் மையங்கள் திறந்திருக்கும்.

சிறுநீரக பராமரிப்புக்கான சேஹா சென்டர்கள்:

>> அபுதாபி, அல் அய்ன் மற்றும் முக்கிய சிறுநீரக பராமரிப்புக்கான சேஹா மையங்கள் திங்கள் முதல் வியாழன் வரை 09:00 முதல் 15:00 வரை செயல்படுகின்றன. அவை வெள்ளி முதல் ஞாயிறு வரை இயங்காது.

இரத்த வங்கி:

ரமலான் மாதத்தில் அபுதாபி, அல் அய்ன் மற்றும் அல் தஃப்ராவில் திங்கள் முதல் வெள்ளி வரை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 08:00 முதல் 14:00 வரை மற்றும் 20:00 முதல் 02:00 வரை இரத்த வங்கிகள் திறந்திருக்கும். மருத்துவமனைகள் இரத்த விநியோக நடவடிக்கைகளை 24 மணி நேரமும் தொடர்கின்ற வேளையில், சனிக்கிழமைகளில் இரத்த வங்கி மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!