அமீரக செய்திகள்

துபாயில் உயர்நிலைப் பள்ளி தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கோல்டன் விசா.. இளவரசர் ஹம்தான் உத்தரவு..!

துபாயில் உயர்நிலைப் பள்ளி தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை அங்கீகரித்து, கௌரவிக்கும் வகையில் கோல்டன் விசா வழங்கப்படும் என்று இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமீரக மாணவர்களுக்கு உதவித்தொகையும் 10 வருட கால குடியிருப்பு விசாவும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவித்தார். முன்னதாக உயர்நிலைப் பள்ளி தேர்வுகளின் நல்ல மதிப்பெண்கள் பெரும் மாணவர்களுக்கு கோல்டன் விசா வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பாக அமீரகத்தின் Federal Authority for Identity, Citizenship, Customs and Port Security கூறியதாவது, சமீபத்தில் நடைபெற்ற உயர்நிலை தேர்வில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு கோல்டன் விசா வழங்க நடைமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டமானது பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்கிற நோக்கில் கௌரவிக்கப்பட இருப்பதாக கூறியுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!