அமீரக செய்திகள்

ஈத் விடுமுறை நாட்களில் மட்டும் 200,000க்கும் அதிகமான பயணிகளை வரவேற்ற DXB..!! தொடர்ந்து பயணிகள் போக்குவரத்து அதிகரிப்பதாக தகவல்….

ஈத் விடுமுறை நாட்களில் சுமார் 200,000 பயணிகள் துபாய் விமான நிலையங்களைக் கடந்து சென்றுள்ளதாக துபாயின் ஊடக அலுவலகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. மேலும், அவர்களில் 110,000 பேர் ஈத் அல் ஃபித்ரின் போது பயணம் மேற்கொண்டதாகவும் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆண்டு துபாய் விமான நிலையம் வழியாக பயணிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக GDRFA-இன் லெப்டினன்ட் ஜெனரல் முகமது அஹ்மத் அல் மரி கூறியுள்ளார்.

விடுமுறைக்கு முன்னதாக, துபாயின் முதன்மை விமான நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் ஏப்ரல் 19 மற்றும் மே 31 க்கு இடையில் அதன் மத்திய கிழக்கு விமான சேவைகளை அதிகரிக்கும் என்று கூறியிருந்த நிலையில், விமான நிறுவனம் GCC மற்றும் மத்திய கிழக்கில் உள்ள ஆறு நகரங்களுக்கு 38 கூடுதல் விமானங்களைச் சேர்த்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும், தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக உலகின் பரபரப்பான விமான நிலையமாக துபாய் விமான நிலையம் இந்த மாத தொடக்கத்தில் ஏர்போர்ட்ஸ் கவுன்சில் இன்டர்நேஷனல் (ACI) மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த ஆண்டில் பயணிகள் போக்குவரத்து 66 மில்லியனுக்கும் அதிகமாக இருமடங்காக அதிகரித்ததை அடுத்து 2023க்கான பயணிகளின் கணிப்பை 78 மில்லியனாக DXB உயர்த்தியுள்ளது.

இது குறித்து துபாய் விமான நிலையத்தின் CEO பால் கிரிஃபித்ஸ் அவர்கள் கூறுகையில், 2022 ஆம் ஆண்டு முழுவதும் DXB-இன் செயல்திறன் மற்றும் இறுதி காலாண்டில் போக்குவரத்து அதிகரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மிகவும் பரபரப்பான விமான நிலையம் என்ற பெயரை துபாய் விமான நிலையம் தக்கவைத்துக்கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!