அமீரக செய்திகள்

UAE: இனி எல்லாரும் டெஸ்லா காருல டிராவல் பண்ணலாம்..!! இது வேற லெவல் ப்ளானா இருக்கே..!! அறிமுகமாகும் டெஸ்லா டாக்ஸிகள்…

அபுதாபியின் டாக்ஸி குழு தற்போது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் டாக்ஸிகளை இயக்குவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக பிரபல டெஸ்லா நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் அபுதாபி டாக்ஸி சேவையில் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தி சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், டாக்ஸிகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கும் நாட்டின் முன்முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, டெஸ்லா கார்கள் டாக்ஸி சேவையில் சேரவுள்ளதாக அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) அறிவித்துள்ளது.

அபுதாபியின் பல்வேறு இடங்களில் மார்ச் 8 முதல் 17 வரை ஒர்க் ஷாப்புகள், நிகழ்வுகள் போன்றவற்றை நடத்தும் ITC இந்த டெஸ்லா வாகனங்களின் அறிமுகத்தை அறிவித்துள்ளது. ஆனால், எத்தனை டெஸ்லா டாக்ஸிகள் சாலைகளில் செல்லும் என்பது குறித்த விவரங்களை ஆணையம் முழுமையாக வெளியிடவில்லை.

இது குறித்து அபுதாபியில் உள்ள முனிசிபாலிட்டிகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் ஒரு பகுதியான ITC யின் இயக்குநர் ஜெனரல் அப்துல்லா அல் மர்ஸூகி அவர்கள் கூறுகையில், வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பதுடன் கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தவும், எமிரேட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் டெஸ்லா கார்களை டாக்ஸிகளில் சேர்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அரேபியா டாக்ஸி டிரான்ஸ்போர்ட்டேஷன் நிர்வாக இயக்குனர் ஷேக் சுல்தான் மஜித் ஹமத் அல் காசிமி என்பவர் கூறியதாவது: இந்த நடவடிக்கை அபுதாபி பொதுமக்களை கவரும் என்பதில் சந்தேகமில்லை, ஏனெனில் இது அவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்த பங்களிக்கிறது. அவர்களின் திருப்தியை அதிகரிக்கிறது மற்றும் டெஸ்லா கார்களைப் பயன்படுத்தும் போது அவர்களை உற்சாகம் அடையச் செய்கிறது.

அதே சமயம் இன்னும் நான்கு வருடங்களில் அதாவது 2027 ஆம் ஆண்டிற்குள் துபாய் முழுவதும் உள்ள டாக்ஸிகளை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றும் முயற்சியில் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஈடுபட்டு வருகிறது. இதுவரை, துபாயில் உள்ள டாக்ஸிகளில் 50 சதவீதம் மின்சாரம் அல்லது ஹைபிரிட் வாகனங்கள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!