அமீரக செய்திகள்

UAE: குடியிருப்பாளர்களுக்கு குட் நியூஸ்!! டாக்ஸி கட்டணங்கள் குறைப்பு..!! அஜ்மான் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏப்ரல் முதல் எரிபொருட்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், அஜ்மானின் போக்குவரத்து ஆணையம் டாக்ஸி கட்டணத்தை குறைத்துள்ளது.

ஏற்கனவே, அமீரகமானது பெட்ரோல் விலையை லிட்டருக்கு 8 ஃபில்ஸ் வரை குறைத்ததால் குடியிருப்பாளர்கள் வாகன உரிமையாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர், சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, எரிபொருளின் விலை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதால் நடுத்தர மக்களும் நிம்மதிப் பெருமூச்சை விடுகின்றனர்.

இது குறித்து அஜ்மான் ட்ரான்ஸ்போர்ட் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ஏப்ரல் மாதத்தில் டாக்ஸிக் கட்டணம் கிலோமீட்டருக்கு 1.82 திர்ஹம்களாக இருக்கும், இது கடந்த மாதம் கிலோமீட்டருக்கு 1.84 திர்ஹம் கட்டணமாக வசூல் செய்யப்பட்டதிலிருந்து 2 ஃபில்ஸ் சரிவடைந்துள்ளது. அமீரகத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 8 ஃபில்ஸ் வரை குறைத்ததால் இந்த மாற்றம் வந்துள்ளது” என தெரிவித்துள்ளது.

அமீரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, Super 98 பெட்ரோல் விலை 7 ஃபில்ஸ் சரிவடைந்து 3.09ல் இருந்து 3.01 திர்ஹம்களாகவும், ஸ்பெஷல் 95 இன் விலை 2.97 திர்ஹம்களில் இருந்து 2.90 திர்ஹம்களாகவும் குறைந்தது. மார்ச் மாதத்தில் 2.90 திர்ஹம்களுக்கு விநியோகிக்கப்பட்ட இ-பிளஸ் 91, ஏப்ரலில் 2.82 திர்ஹம்களாக குறைந்தது. அதுபோல, டீசல் விலை 3.14 திர்ஹம்களில் இருந்து வீழ்ச்சியடைந்து 3.03 திர்ஹம்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

அமீரகத்தின் எரிபொருள் விலைக் குழு ஒவ்வொரு மாத இறுதியிலும் உள்ளூர் சில்லறை எரிபொருள் விலைகளை மாற்றியமைத்து வரும் நிலையில், குறைந்த வரி விகிதங்கள் காரணமாக, அமெரிக்கா, ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளை விட அமீரகத்தில் பெட்ரோல் விலை மிகவும் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!