அமீரக செய்திகள்
UAE: கேமரா மட்டுமல்ல போலீஸ் வாகனமும் லைசன்ஸ் பிளேட்டுகளை ஸ்கேன் செய்யும்..!! ஷார்ஜா முனிசிபாலிட்டி வெளியிட்டுள்ள தகவல்…!!

ஷார்ஜா முனிசிபாலிட்டியின் டிஜிட்டல் ஸ்கேனிங் வாகனங்கள் (DSVs) நாளொன்றுக்கு 22,000 வாகனங்களுக்கு மேல் அதன் லைசன்ஸ் ப்ளேட் மற்றும் பார்க்கிங் கட்டணத்தை ஆய்வு செய்யும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது, ஒரு மணி நேரத்திற்கு சுமார் 3,000 வாகனங்களை ஆய்வு செய்யும் திறன் கொண்டது எனக் கூறப்படுகிறது.
இதுவரை சுமார் 64,754 பார்க்கிங் மண்டலங்களை ஆய்வு செய்ய மூன்று DSVகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை நகரத்தில் உள்ள பொது பார்க்கிங் இடங்களை ஆய்வு செய்து, பார்க்கிங் கட்டணம் குறித்த துல்லியமான தகவலை ஆய்வாளர்கள் மற்றும் பார்க்கிங் கட்டுப்பாட்டு அறைக்கு வழங்குகின்றன என கூறப்பட்டுள்ளது.
இதனால், நேரம் மிச்சப்படுவதுடன் அதிகாரிகளின் பணிச்சுமையும் குறைக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.