அமீரக செய்திகள்

துபாயில் நடைபெறும் ஆசிய கிரிக்கெட் தொடர்போட்டி.. பார்வையாளர்களுக்கான புதிய வழிமுறையை வெளியிட்ட காவல்துறை..!

துபாய் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆகஸ்ட் 27 ஆம் தேதி தொடக்க உள்ளது. 16 நாள் போட்டிகள் இந்த சனிக்கிழமை ஆகஸ்ட் 27 அன்று துபாய் சர்வதேச மைதானத்தில் இலங்கை ஆப்கானிஸ்தான் அணிகள் முதல் நாள் விளையாட உள்ளன. ஆகஸ்ட் 28 அன்று இந்தியா- பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ளன.

அதற்கான ரசிகர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களின் பட்டியலை துபாய் காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில், செல்ஃபி ஸ்டிக்குகள். மொபைல் பவர் பேங் அரசியல் கொடிகள், பதாகைகள், பைக்குகள், ஸ்கேட்போர்டுகள்,  ஸ்கூட்டர்கள் போன்றவைகாள் மைதானங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் ரசிகர்காளுக்கான் முக்கிய குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளது

  • போட்டிக்கு மூன்று மணி நேரத்திற்கு முன் கதவுகள் திறக்கப்படும்.
  • நுழைவதற்கு சரியான டிக்கெட் தேவை.
  • மறு நுழைவு அனுமதி இல்லை.
  • 4 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு டிக்கெட் தேவை.
  • பிரத்யேக பார்க்கிங் வசதி உள்ளது.
  • சீரற்ற/தடை செய்யப்பட்ட இடத்தில் பார்க்கிங் அனுமதிக்கப்படாது.

பின்வரும் பொருட்கள்/செயல்பாடுகளுக்கும் அனுமதி இல்லை என்று காவல்துறை அறிவித்துள்ளது.

  • ரிமோட் கண்ட்ரோல் சாதனங்கள்.
  • விலங்குகள்.
  • கண்ணாடி.
  • படப்பிடிப்பு அல்லது ஃபிளாஷ் புகைப்படம் எடுத்தல்.
  • சட்டவிரோத அல்லது போதை பொருட்கள்.
  • வானொலி தொடர்பு சாதனங்கள் அல்லது பவர் பேங்குகள்.
  • செல்ஃபி ஸ்டிக்குகள்.
  • கூர்மையான பொருட்கள்.
  • பட்டாசு அல்லது நெருப்பு சார்ந்த பொருட்கள்.
  • லேசர்கள்.
  • வெளிப்புற உணவு மற்றும் குளிர்பான வகைகள்.
  • அரசியல் கொடிகள் மற்றும் பதாகைகள்
  • பைக்குகள், ஸ்கேட்போர்டுகள் மற்றும் ஸ்கூட்டர்கள்
  • புகைபிடித்தல்

Related Articles

Back to top button
error: Content is protected !!