அமீரக செய்திகள்

எமிரேட்ஸ் டிரா அறிமுகம் செய்துள்ள புதிய டிரா.. வெற்றி பெரும் அதிர்ஷ்டசாலிக்கு ஒவ்வொரு மாதமும் 25,000 திர்ஹம்ஸ் பரிசு.!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வாரந்தோரும் மிகப்பெரிய பரிசுத்தொகையை பங்கேற்பாளர்களுக்கு அளித்துவரும் எமிரேட்ஸ் டிரா, தற்போது மூன்றாவதாக மீண்டும் ஒரு புதிய டிராவை அறிமுகம் செய்துள்ளது. நேற்று  திங்கள்கிழமை (மே.23) அறிவிக்கப்பட்ட FAST5 எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய டிராவில் வெற்றி பெறும் அதிர்ஷ்டசாலிக்கு, கிராண்ட பரிசாக 25,000 திர்ஹம்ஸ் பணம், ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என எமிரேட்ஸ் டிரா அறிவித்துள்ளது.

வெறும் 25 திர்ஹம்ஸ் டிக்கெட்டில் பங்கேற்பாளர்கள் இந்த FAST5 டிராவில் கலந்து கொள்ள அனுமதிப்பதன் மூலம், வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி பெறுவதற்கான விரைவான வழியை இந்த புதிய டிரா அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாகவும் எமிரேட்ஸ் டிரா தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த புதிய டிராவில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்கள், 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 25,000 திர்ஹம் பணம் என்ற கிராண்ட் பரிசை வெல்வதற்காக போட்டியிடும் வாய்ப்பைப் பெறுவது மட்டுமில்லாமல், ரேஃபிள் டிராவில் வெற்றி பெரும் மூன்று பங்கேற்பாளர்கள் தலா 75,000 திர்ஹம், 50,000 திர்ஹம் மற்றும் 25,000 திர்ஹம் போன்ற கணிசமான தொகையை வெல்ல முடியும் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, ஒவ்வொரு டிக்கெட்டும் டூ இன் ஒன் வாய்ப்பை கொடுக்கும் என்பதால், கிராண்ட் பரிசைத் தட்டிச் செல்வதற்கான வாய்ப்பை இது விரிவுபடுத்தும் என்று எமிரேட்ஸ் டிரா தெரிவித்துள்ளது. மேலும், இந்த புதிய FAST5 கேம் ஒவ்வொரு சனிக்கிழமையும் UAE நேரப்படி இரவு 9 மணிக்கு நடைபெறும் என்றும், இதன் முதல் ஆட்டம் மே 27 அன்று நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பங்கேற்பாளர்களுக்கு ஒவ்வொரு வாரமும் மூன்று டிராக்களை விளையாடுவதற்கான வாய்ப்பை வழங்கும் எமிரேட்ஸ் டிராவில், கூடுதலாக அதன் MEGA7-இல் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா முழுவதும் மிகப்பெரிய கிராண்ட் பரிசான 100 மில்லியன் திர்ஹம்களை வழங்குவதுடன் EASY6 வாராந்திர டிராவில் 15 மில்லியன் திர்ஹம் கிராண்ட் பரிசையும் வழங்கி வருகிறது.

இது குறித்து எமிரேட்ஸ் டிராவின் மார்க்கெட்டிங் தலைவர் பால் சேடர் அவர்கள் கூறுகையில்,  “பங்கேற்பாளர்கள் தங்களது பல்வேறு கனவுகளை 25 திர்ஹம் டிக்கெட் மூலம் யாதார்த்தமாக மாற்றுவதற்கு FAST5 டிரா வாய்ப்பளிப்பதுடன் இந்த அசாதாரண விளையாட்டு வரம்பற்ற சாத்தியக்கூறுகளுக்கான கதவைத் திறக்கிறது, எதிர்காலத்தில் பாதுகாப்பு மற்றும் நிதி கவலைகளிலிருந்து விடுபடுவதை உறுதி செய்கிறது” என்றும் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!