அமீரக செய்திகள்

UAE: கட்டாய வேலை இழப்பு காப்பீட்டுத் திட்டம் – இரண்டு புதிய வேலை பிரிவுகளை சேர்த்துள்ள அமைச்சகம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் வேலை இழப்பு திட்டத்தை விரிவுபடுத்த மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்தால் (MoHRE) இரண்டு புதிய வகுப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. MoHRE அறிமுகப்படுத்திய வேலை இழப்பு (involuntary loss of employment- ILoE) திட்டத்தில் தற்பொழுது Free Zone மற்றும் Semi-Government நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களும் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டின் ஜனவரி மாத தொடக்கத்தில் தனியார் துறை மற்றும் மத்திய அரசாங்கத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை இழப்புக் காப்பீட்டிற்கு பதிவு செய்வதை அமைச்சகம் காட்டாயமாக்கியுள்ளது. இந்த திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது என்று அமைச்சகம் ஏப்ரல் தொடக்கத்தில் கூறியிருந்தது.

இந்த காப்பீட்டுக் கொள்கைகளின் படி, ஜூன் 30க்குள் சந்தா செலுத்தத் தவறினால் ஊழியர்களுக்கு 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும். அதுபோல, உரிய தேதியில் இருந்து மூன்று மாதங்களுக்கு மேல் பிரீமியத்தை செலுத்தத் தவறினால் 200 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்.

வேலையிழப்பு காப்பீட்டு திட்டத்தின் கீழ், 16,000 திர்ஹம்களுக்கும் குறைவான அடிப்படை சம்பளம் கொண்ட ஊழியர்கள் மாதத்திற்கு 5 திர்ஹம்  அல்லது வருடத்திற்கு 60 திர்ஹம்  மற்றும் VAT ஐ பிரீமியமாக செலுத்த வேண்டும், இவர்களுக்கு தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு வேலை இழப்பிற்கு சராசரி அடிப்படை சம்பளத்தில் 60 சதவீதம் இழப்பீடு வழங்கப்படும்.

அதேசமயம், 16,000 திர்ஹம்களுக்கு மேல் அடிப்படை சம்பளம் உள்ள ஊழியர்கள் இந்த திட்டத்தின் கீழ் மாதம் 10 திர்ஹம் அல்லது 120 திர்ஹம் ஆண்டு பிரீமியம் செலுத்த வேண்டும். பாலிசி காலம் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, ஊழியர்கள் அவர்களது சந்தாக்களை துபாய் இன்சூரன்ஸ், ILOE இணையதளம், அல் அன்சாரி எக்ஸ்சேஞ்ச் மற்றும் ATM ஆகியவற்றிலிருந்து செலுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மனித வளங்கள் மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சர் டாக்டர் அப்துல்ரஹ்மான் அல் அவார் அவர்கள், இந்தத் திட்டத்தில் சேரத் தகுதியுடைய ஊழியர்களை திட்டத்தில் சேர்ந்து பயனடையவும், முதலாளிகள் தங்கள் ஊழியர்களை சந்தா செலுத்த ஊக்குவிக்கவும் அழைப்பு விடுத்துள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!