அமீரக சட்டங்கள்அமீரக செய்திகள்

UAE: வேலையை விட்டு விலகும் ஊழியர்களுக்கு எத்தனை நாட்களில் இறுதி தொகையை செலுத்த வேண்டும்.? வேலைவாய்ப்பு சட்டம் கூறுவது என்ன?

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நிறுவனத்தில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்தால், நிறுவனம் எவ்வளவு விரைவில் முழுமையான மற்றும் இறுதி தொகையை செலுத்த வேண்டும் மற்றும் ஊழியர் ராஜினாமா செய்த பிறகு எவ்வளவு நாட்களில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் போன்ற கேள்விகள் சிலருக்கு இருக்கலாம். அது பற்றி அமீரகத்தின் வேலைவாய்ப்புச் சட்டம் என்ன கூறுகிறது என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் அமீரகத்தைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் நிறுவனத்தில் பணிபுரிகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். வேலைவாய்ப்புச் சட்டத்தின் 53 வது பிரிவின்படி, ஒப்பந்தத்தின் காலாவதி தேதியிலிருந்து 14 நாட்களுக்குள் ஊழியருக்கு செலுத்த வேண்டிய அனைத்து நிதிப் பாக்கிகளையும் நிறுவனம் கட்டாயம் செலுத்த வேண்டும். இந்த நிலுவைத் தொகைகளில் ஊழியரின் சம்பளம் மற்றும் ஒப்பந்தத்தில் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ள பிற இழப்பீடுகளும் அடங்கும்.

மேலும், ஊழியருடைய அனைத்து உரிமைகள் மற்றும் அதைச் செயல்படுத்துவதற்கான தீர்மானங்கள், ஒப்பந்தம் அல்லது நிறுவனத்தின் துணைச் சட்டங்கள் ஆகியவற்றையும் முதலாளி குறித்த காலத்திற்குள் செலுத்த வேண்டும் என்று அமீரகத்தின் வேலைவாய்ப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், 2022 ஆம் ஆண்டின் கேபினட் தீர்மானம் எண். 1 இன் பிரிவு 7(3) இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நிறுவன முதலாளியே மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகத்திடம் (MoHRE) ஊழியரின் பணி அனுமதிப் பத்திரத்தை ரத்து செய்யும் செயல்முறையை தொடங்க வேண்டும்.

வேலை அனுமதிகளை ரத்து செய்வதற்கான நடைமுறைகள்:

  • பணி அனுமதியை ரத்து செய்வதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது அமைச்சகத்தால் குறிப்பிடப்பட்ட வழிகள் மூலம் செய்யப்பட வேண்டும்.
  • தேவையான தரவு மற்றும் இணைக்கப்பட்ட ஆவணங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • பணி அனுமதிச் சீட்டை வழங்குவதில் தாமதம் அல்லது ஏதேனும் இருந்தால் அதை புதுப்பிக்கத் தவறியதற்காக அபராதம் செலுத்த வேண்டும்.
  • தொழிலாளியின் அனைத்து உரிமைகளையும் வழங்குவதற்கான நிறுவனத்தின் அங்கீகாரம்.

மேலும், 1985 ஆம் ஆண்டின் 7 ஆம் சட்டம், 1996 ஆம் ஆண்டின் 13 ஆம் சட்டம் மற்றும் 2017 ஆம் ஆண்டின் ஃபெடரல் ஆணை- சட்டம் எண் 17 இன் அடிப்படையில் திருத்தப்பட்ட குடியேற்றம் மற்றும் வசிப்பிடத்தைப் பற்றிய 1973 ஆம் ஆண்டிற்கான ஃபெடரல் சட்ட எண் (6) இன் கட்டுரை (19) இன் படி, தனிநபர் தனது வசிப்பிடத்தை ரத்து செய்த பிறகு அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.

அதாவது, அமீரகத்தில் வசிப்பதற்கான குடியிருப்பு உரிமம் பெற்ற வெளிநாட்டவர்கள் தங்களின் குடியிருப்பு அனுமதி ரத்து செய்யப்பட்டாலோ அல்லது அவரது பதவிக்காலம் முடிவடைந்தாலோ, செல்லுபடியாகும் குடியிருப்பு விசா இல்லாத பட்சத்தில், குடியேற்ற சட்டத்தின்படி அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பது கட்டாயமாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!