வளைகுடா செய்திகள்

சவூதி: உம்ரா செய்வதற்கான குறைந்தபட்ச வயது தகுதியை நிர்மாணித்த அமைச்சகம்..!!

உலகெங்கிலும் மில்லியன் கணக்கான முஸ்லிம்கள், ஆண்டுதோறும் மக்காவில் உள்ள பெரிய மசூதியில் உம்ரா செய்ய சவுதி அரேபியாவுக்கு வருகிறார்கள். இவ்வாறு சவூதிக்கு உம்ரா செய்ய வருபவர்களுக்கான வயது தகுதியை சவூதியின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் நிர்ணயம் செய்கிறது. இந்நிலையில் தற்பொழுது சவூதி அரேபியாவில் இஸ்லாமியர்கள் உம்ரா மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குவதற்கான குறைந்தபட்ச வயதாக ஐந்து ஆண்டுகளை நிர்ணயம் செய்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் உம்ரா செய்ய அனுமதிக்கப்படும் குறைந்தபட்ச வயதாக ஐந்து வயதை குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் பெற்றோர்களால் அழைத்துச் செல்லப்படும் குழந்தைகளே புனித காபாவைக் கொண்ட பெரிய மசூதியை அணுகலாம் என்று அமைச்சகம் கூறியுள்ளது.

இது பற்றி அமைச்சகம் தெரிவிக்கையில் “உம்ரா அனுமதிக்கு முன்பதிவு செய்வதற்கான குறைந்தபட்ச வயது ஐந்து ஆண்டுகள் ஆகும். ஆனால் குழந்தைக்கு கொரோனா தொற்று பாதிப்போ அல்லது கொரோனா வைரஸ் நோயாளியுடன் தொடர்பிலோ இல்லாமல் இருத்தல் வேண்டும்” என்று அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும் சவூதி அரேபியா சமீபத்தில் ஒரு மின்னணு தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சவூதியின் புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனாவிற்குச் செல்வது உட்பட உம்ரா சேவைகளை அணுகுவதற்கு எளிதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

nusuk.sa என்ற இந்த தளமானது உம்ராவை மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்கள் புனிதத் தலங்களுக்குச் சென்று தேவையான விசாக்கள் மற்றும் அனுமதிகளைப் பெறுவதற்கும் அது தொடர்பான தொகுப்புகளை மின்னணு முறையில் பதிவு செய்வதற்கும் உதவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!