அமீரக செய்திகள்

துபாயின் RTA பேருந்துகளை 5 திர்ஹம்களில் முன்பதிவு செய்யலாம்!! – ஆப் மூலம் முன்பதிவு செய்வது எப்படி..?

துபாயின் அனைத்து பகுதிகளிலும் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தவும், போக்குவரத்து வசதிகளை பயணிகளின் வசதிக்கேற்ப கட்டமைக்கவும் RTA பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக உலகத் தரம் வாய்ந்த பொதுப் போக்குவரத்து அமைப்பை புதுமைப்படுத்தவும், அதனை அடுத்த கட்டங்களுக்கு கொண்டு செல்லவும் பேருந்துகளில் முன்பதிவு செய்யும் முறையை RTA அறிமுகப்படுத்தி உள்ளது.

தொந்தரவு இல்லாத பயணங்களுக்கான அல்டிமேட் டிக்கெட் என்று RTAஆல் அழைக்கப்படும் இந்த ‘One service’ எனும் பயண விருப்பத்தின் மூலம், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் மொபைலில் ஒரு சில கிளிக்குகளின் மூலம் பேருந்தில் தங்களின் இருக்கையை முன்பதிவு செய்யலாம்.

பஸ் ஆன் டிமாண்ட் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த போக்குவரத்து வசதி தற்போது அல் பர்ஷா (1, 2, 3), அல் நஹ்தா, துபாய் சிலிக்கான் ஒயாசிஸ் மற்றும் அகாடமிக் சிட்டியைச் சுற்றிய பகுதிகளில் சேவையை வழங்குகிறது. இதில் தனித்தனியாகவோ அல்லது குழுவாகவோ சேவையை முன்பதிவு செய்யலாம், மேலும், பயணத்தைத் தொடங்கிய அதே மண்டலத்திற்குள் பயணிக்கலாம் என்று RTA இணையதளம் தெரிவித்துள்ளது.

அதாவது, இது ஒரு டாக்ஸியை முன்பதிவு செய்வது போன்றதாகும். இதில் உங்கள் இருப்பிடம் மற்றும் சேருமிடத்தை உள்ளிட்டதும், நீங்கள் எந்த நேரத்தில் பேருந்தை எதிர்பார்க்கலாம், எங்கு ஏற வேண்டும், எந்த நேரத்தில் நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடைவீர்கள் என்ற தகவல்கள் அனைத்தையும் இந்த மொபைல் ஆப் உங்களுக்குத் தெரிவிக்கும்.

அத்துடன் RTA வின் இந்த சேவையானது ஸ்மார்ட் மற்றும் திறமையானது மட்டுமின்றி, பயணிகளின் வசதிக்கேற்ப மலிவான விலையிலும் உள்ளது. இந்த பேருந்தில் பயணிக்க ஒரு பயணி 5 திர்ஹம் மட்டுமே செலுத்த வேண்டும், மேலும் அவர் ஒரு குழுவுடன் பயணித்தால் அவருடன் வரும் கூடுதல் பயணிகளுக்கு தலா 4 திர்ஹம் மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எப்படி முன்பதிவு செய்வது?

  • Dubai Bus on Demand என்ற ஸ்மார்ட் ஆப்பை மொபைலில் டவுன்லோட் செய்து சேவைக்கு முன்பதிவு செய்யவும்.
  • கட்டண விவரங்களை (கிரெடிட், டெபிட் அல்லது nol கார்டு) உள்ளிடவும்.
  • பின்னர் பேருந்து இருக்கும் இடம், இருக்கை கிடைக்கும் இடம், வருகை நேரம் மற்றும் இயக்க மண்டலத்திற்குள் விரும்பிய இடத்திற்குச் செல்லும் மதிப்பிடப்பட்ட பயண நேரம் ஆகியவற்றை ஆப் காண்பிக்கும்.
  • உங்களது பிக்அப் மற்றும் டிராப்-ஆஃப் விவரங்களைச் சரிபார்த்தவுடன், சேவையை முன்பதிவு செய்யவும்.
  • அதன் பிறகு, கிரெடிட் கார்டு மூலமாகவோ அல்லது போர்டில் உள்ள இயந்திரங்களில் தட்டப்பட வேண்டிய நோல் கார்டு மூலமாகவோ பணம் செலுத்தலாம்.
  • கடைசியாக, நியமிக்கப்பட்ட நேரத்தில் பேருந்திற்காகக் காத்திருந்து, ஏறி, உங்கள் பயணத்தை அனுபவிக்கவும்.

RTA வின் இந்த சிறப்பு பேருந்து சேவையானது பயணம் தொடங்கிய அதே மண்டலத்திற்குள் மட்டுமே பயணிகள் பயணிக்க முடியும் என்று RTA தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், ஒவ்வொரு மண்டலத்தின் சேவைப் பகுதியும் ஸ்மார்ட் பயன்பாட்டில் வழங்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட மண்டலத்திற்குள் ஒவ்வொரு பயணத்திற்கும் தனித்தனி முன்பதிவுகள் தேவை என்பதை பயணிகள் நினைவில் கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!