வளைகுடா செய்திகள்

அரசு, தனியார் துறை ஊழியர்களுக்கு ஈத் அல் அதா விடுமுறையை அறிவித்த ஓமான்..!! எத்தனை நாட்கள்..??

ஓமானில் வரவிருக்கும் ஈத் அல் அதாவை முன்னிட்டு ஊழியர்களுக்கான விடுமுறை நாட்களை தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது. அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் உள்ள ஊழியர்களுக்கு 27 ஜூன், செவ்வாய்ககிழமை முதல் ஜூலை 1 சனிக்கிழமை வரை விடுமுறை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் ஜூலை 2, ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஊழியர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமானில் வரும் 28ம் தேதி ஈத் அல் அதா கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதே நேரத்தில் தொழிலாளர்களின் பணியின் தன்மையின் காரணமாக வேலை தேவையெனக் கருதப்பட்டால், அந்த விடுமுறையில் ஊழியர்களை ஈடுபடுத்துவதற்கான விதிமுறைகளை முதலாளிகள் ஏற்றுக்கொள்ளலாம் என்றும் தொழிலாளர் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!