அமீரக செய்திகள்

UAE: அரபிக்கடலில் உருவாகும் வெப்பமண்டல புயல்.. மணிக்கு 145 கிமீ வேகத்தில் காற்று வீசும்.. NCM அறிக்கை.!!

அரபிக்கடலின் தெற்கு பகுதியில் அடுத்த வார இறுதியில் வெப்ப மண்டல புயல் உருவாக இருப்பதாக அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) உறுதி செய்துள்ளது. அரேபிய கடலின் தெற்கே அட்சரேகை 11.9 வடக்கு மற்றும் 66.00 தீர்க்கரேகையில் மையம் கொண்டுள்ள வெப்பமண்டல காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து நேற்று செவ்வாய்க்கிழமை NCM வெளியிட்டிருந்த அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வெப்பமண்டல காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து NCM விவரிக்கையில், புயலின் மையத்தைச் சுற்றி காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 90 கிமீ வரை இருக்கும் என்றும், காற்றழுத்த தாழ்வு மண்டலத்தைச் சுற்றி மழைவெப்ப மேகங்கள் உருவாகும் என்றும் கூறியுள்ளது.

அத்துடன், பிராந்திய சூறாவளி கண்காணிப்பு மையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் மூலம், இந்த வெப்பமண்டல தாழ்வு நிலையானது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து வெப்பமண்டல சூறாவளியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த புயல் அரேபிய கடலில் வடக்கு நோக்கி வீசும், அங்கு காற்றின் வேகம் மையத்தை சுற்றி மணிக்கு 130 முதல் 145 கிமீ வேகத்தில் இருக்கும் மற்றும் வெப்பமண்டல புயல் மணிக்கு 5 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகரும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அடுத்த வரக்கூடிய ஐந்து நாட்களுக்கு இந்த வெப்பமண்டல புயலால் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எந்த வித பாதிப்பும் இருக்காது என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!