அமீரக செய்திகள்

அமீரகத்தில் பொது விடுமுறை நாட்களில் வேலை செய்யும் ஊழியர்களின் உரிமை என்ன..? – நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய சட்ட விதிகள் இங்கே..

அமீரகத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர், ஈத் அல் அதா விடுமுறையின் நான்கு நாட்களிலும் வேலை செய்ய வைக்கப்பட்டால், அவருக்கு என்னவெல்லாம் உரிமை இருக்கிறது மற்றும் அதற்கான ஊதிய விபரங்கள் என்ன என்பது பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒவ்வொரு ஊழியரும் பொது விடுமுறைக்கு தகுதியுடையவர் என்று மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் அறிவித்துள்ளது. அதாவது, வேலைவாய்ப்புச் சட்டத்தின் பிரிவு 28(1) இன் படி, அமைச்சரவையால் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து பொது விடுமுறை நாட்களிலும் முழு ஊதியத்துடன் விடுமுறையை அனுபவிக்க ஊழியருக்கு உரிமை உண்டு.

இருப்பினும், வேலைவாய்ப்புச் சட்டத்தின் பிரிவு 28(2)ன் படி, நிறுவனத்தின் உரிமையாளர் பொது விடுமுறை நாட்களில் பணிபுரிய ஒரு பணியாளரை அழைத்தால், அந்த பணியாளருக்குப் பணிபுரியும் ஒவ்வொரு நாளுக்கும் மாற்று ஓய்வு நாள் அல்லது ஒரு நாள் சம்பளத்துடன் அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் கூடுதல் ஊதியமாக வழங்க வேண்டும்.

ஆகவே, மேற்கூறிய விதிகளின் படி, வரவிருக்கும் பொது விடுமுறை நாட்களில் பணிபுரியுமாறு உங்கள் முதலாளி உங்களை அழைத்தால், கூடுதல் சம்பளம் அல்லது மாற்று விடுப்பைப் பெறுவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. அதேசமயம், அமீரகத்தின் வேலைவாய்ப்புச் சட்டத்தின் மேற்கூறிய விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதால், இந்தக் கடமைகள் தொடர்பான விதிவிலக்குகள் உங்கள் முதலாளிக்கு இருக்காது.

அதுமட்டுமின்றி, உங்கள் முதலாளி வழங்கும் மாற்று விடுமுறை நாட்களை பயண்படுத்தாமல் அதனை உங்கள் வருடாந்திர விடுப்புடன் இணைக்க விரும்பினால், நீங்கள் தாராளமாக உங்கள் முதலாளியிடம் கோரவும் அனுமதி உண்டு.

இல்லையெனில், உங்கள் நிறுவனத்தின் மனிதவள பாலிசியில் வருடாந்திர விடுமுறைகளுடன் மாற்று விடுமுறையை இணைப்பதற்கு ஏற்பாடு இருந்தால், உங்கள் வசதிக்கேற்ப அத்தகைய விருப்பங்களையும் நீங்கள் பெற முடியும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!