அமீரக செய்திகள்

துபாயில் கட்டப்படவிருக்கும் உலகின் இரண்டாவது உயரமான வானுயர் கட்டிடம்..!! ஷேக் சையத் சாலையில் கட்டப்படும் என்றும் தகவல்…!!

உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையை ஏற்கனவே துபாயின் புர்ஜ் கலீஃபா தக்கவைத்துக் கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு வானுயர் கட்டிடம் துபாயில் விரைவில் உயர உள்ளது, இது உலகின் இரண்டாவது மிக உயரமான கட்டிடமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில், துபாயை தளமாகக் கொண்ட அஜிஸி டெவலப்மென்ட்ஸின் (Azizi Developments) CEO ஃபர்ஹாத் அஜிஸி அவர்கள் வெளியிட்ட ட்வீட்டில் “உலகின் இரண்டாவது மிக உயரமான கட்டிடத்தை நாங்கள் கட்டவிருக்கின்றோம். இது அதிகாரப்பூர்வமானது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவரது தந்தையான மிர்வைஸ் அஸிஸி (அஜிஸி குழுமம் மற்றும் அஜிஸி டெவலப்மென்ட்ஸின் நிறுவனர் மற்றும் தலைவர்) அவர்கள், துபாயில் மற்றொரு வானுயர் கட்டிடத்தை கட்டுவதற்கான திட்டம் பற்றி BBC பெர்சியாவில் வெளிப்படுத்தியதாகவும் ஃபர்ஹாத் கூறியுள்ளார்.

மேலும், துபாயில் உள்ள ஷேக் சையது சாலையின் ஒரு முக்கிய இடத்தில் இந்த கட்டிடம் கட்டப்படும் என்பதைத் தெரிவித்த ஃபர்ஹாத், புதிய கட்டிடத்தின் பெயர், அதன் உயரம் மற்றும் யூனிட் மிக்ஸ் பற்றிய தகவல்களை வெளியிடவில்லை. அதிலும் புதிய கட்டிடத்திற்கான பெயரைத் தேர்வு செய்வது நிலுவையில் உள்ளதாகவும், எவ்வாறாயினும், இறுதியில் அஜிஸி டெவலப்மென்ட்ஸ் பிராண்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பெயர் தேர்வு செய்யப்படும் என்றும் அவரது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பரில் சிட்டிஸ்கேப் துபாய் எனும் ரியல் எஸ்டேட் தொடர்பான கண்காட்சியில் இந்த கட்டிடத்தைக் கட்டுவதற்கான திட்டம் முதன்முதலில் வெளியிடப்பட்டது. அந்த நேரத்தில் துபாயில் இது இரண்டாவது மிக உயரமான கட்டிடமாக இருக்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆனால், இப்போது மலேசியாவின் கோலாலம்பூரில் மெர்டேக்கா 118 ஐ விஞ்சக்கூடிய உலகின் இரண்டாவது மிக உயரமான கட்டிடமாக இதனை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

உலகின் முதல் 10 உயரமான கோபுரங்கள்:

  1. புர்ஜ் கலீஃபா, UAE – 828 மீ
  2. மெர்டேக்கா 118, மலேசியா – 679மீ
  3. மீஷாங்காய் டவர், சீனா – 632 மீ
  4. அப்ராஜ் அல்-பைட் க்ளாக்டவர், KSA – 601 மீ
  5. பிங் அன் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் சென்டர், சீனா – 599 மீ
  6. லோட்டே வேர்ல்ட் டவர், தென் கொரியா – 555 மீ
  7. ஒன் வேர்ல்ட் ட்ரேட் சென்டர், அமெரிக்கா – 541 மீ
  8. Guangzhou CTF ஃபைனான்ஸ் சென்டர், சீனா – 530மீ
  9. Tianjin CTF ஃபைனான்ஸ் சென்டர், சீனா – 530மீ
  10. சீனா ஜுன், சீனா – 528 மீ

Related Articles

Back to top button
error: Content is protected !!