அமீரக செய்திகள்

அமீரகத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம்..!! தேசிய வானிலை மையம் தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஃபுஜைராவில் இன்று (சனிக்கிழமை) சிறிய அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஃபுஜைராவில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக ஃபுஜைரா எமிரேட்டின் தத்னா பகுதியில் காலை 10.51 மணியளவில் லேசான நடுக்கம் கண்டறியப்பட்டது என்று NCM தெரிவித்துள்ளது. சில சமயங்களில் நாட்டில் இத்தகைய நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்தாலும், குடியிருப்பாளர்கள் இந்த சிறியளவிலான நிலநடுக்கங்களைப் பற்றி கவலைப்பட தேவை இல்லை என்று நிபுணர்கள் முன்பே கூறியுள்ளனர்.

நிபுணர்கள் கூறுகையில், அமீரகத்தில் குறைந்த அளவிலிருந்து மிதமான அளவிலான நில அதிர்வு அவ்வப்போது ஏற்படுகிறது. அதன்படி அமீரகத்தில் ஒரு வருடத்தில் இரண்டு முதல் மூன்று வரை அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. மக்கள் இந்த நடுக்கங்களை அதிகம் உணர்வதில்லை, அவை சென்சார்கள் மூலம் கண்டறியப்படுகின்றன.

மேலும், இந்த நிலநடுக்கங்கள் அனைத்தும் கட்டிடங்கள் அல்லது உள்கட்டமைப்பில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனவே குடியிருப்பாளர்கள் கவலை கொள்ள தேவையில்லை எனவும் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!