அமீரக செய்திகள்

அமீரகத்தில் இன்று மழை பெய்யும்.. வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்.. 23ºC வரை வெப்பநிலை குறையும்.. NCM அறிக்கை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடை வெயில் உச்சத்தில் இருக்கும் வேளையில், அமீரகத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று காலை பரவலாக மலை பெய்ததாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. மேலும், இன்றைய நாளில் வானம் பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் சில நேரங்களில் தூசி நிறைந்ததாக இருக்கும் என்றும் NCM கூறியுள்ளது.

NCM வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று நாட்டில் லேசானது முதல் மிதமான காற்று வீசும் மற்றும் சில சமயங்களில் பகல் நேரத்தில் தூசி வீசும் என்று குறிப்பிட்டுள்ளது. அதேசமயம் காலையில் அமீரகத்தின் கிழக்கு கடற்கரையில் குறைந்த மேகங்கள் தோன்றும் என்றும் பிற்பகலில் கிழக்கு மற்றும் தெற்கு நோக்கி சில வெப்பச்சலன மேகங்கள் உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இந்த நிகழ்வினால் நாட்டின் கிழக்கு பகுதிகளில் சில நேரங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் NCM கூறியுள்ளது. இதே போன்று இன்றைய நாளில் நாட்டின் கிழக்கில் மழை பெய்யும் என அமீரகத்தின் புயல் மையமும் தெரிவித்துள்ளது. அத்துடன், இன்று காலை ஃபுஜைராவின் கடலோரப் பகுதியான மிர்பாவில் மழை பெய்து வருவதாகவும் ட்விட்டரில் ஒரு வீடியோவையும் புயல் மையம் பகிர்ந்துள்ளது.

வெப்பநிலையை பொறுத்தவரை நாட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் என்றும் அது அபுதாபியில் 45ºC ஆகவும், துபாயில் 44ºC ஆகவும் உயரும். அதேசமயம் அபுதாபி மற்றும் துபாயில் குறைந்தபட்ச வெப்பநிலை 34ºC ஆகவும், மலைப்பகுதிகளில் 23ºC ஆகவும் இருக்கும் என்றும் NCM கூறியுள்ளது.

இதனால் இன்று இரவு மற்றும் சனிக்கிழமை காலையில் சில மேற்குப் பகுதிகளில் ஈரப்பதமாக இருக்கும் எனவும், இதனால் மூடுபனி உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவும் NCM தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!