அமீரக செய்திகள்

UAE: அடுத்தடுத்து 5 எமிரேட்டுகளின் பல பகுதிகளில் பெய்யும் ஆலங்கட்டி மழை!! NCM வெளியிட்ட வீடியோ-குடியிருப்பாளர்களை எச்சரிக்கும் அதிகாரிகள்…

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக அடுத்தடுத்து மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 11) அன்று நாட்டின் சில பகுதிகளில் மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.

தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) அறிவிப்பின் படி, நேற்று ராஸ் அல் கைமா, ஃபுஜைரா மற்றும் அபுதாபியின் சில பகுதிகளில் கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ததாக கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அஜ்மான் மற்றும் ஷார்ஜாவில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NCM ஏற்கனவே முந்தைய நாள், மாறிவரும் வானிலை குறித்து குடியிருப்பாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து அமீரகத்தின் கிழக்குப் பகுதிகளில் மழைப்பொழிவு மற்றும் வலுவான காற்றுடன் தொடர்புடைய வெப்பச்சலன மேகங்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

 

மேலும், நாட்டில் கனமழை, திடீர் வெள்ளம் மற்றும் ஆலங்கட்டி மழை ஆங்காங்கே சில பகுதிகளைத் தாக்கி வருவதால், அவற்றிலிருந்து இருந்து மக்கள் விலகி இருக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம், NCM நிலையற்ற வானிலையின் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்க, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது.

இதற்கிடையில், ராஸ் அல் கைமா மற்றும் அல் அய்னில் வெள்ளத்தில் மூழ்கிய பள்ளத்தாக்குகளின் வீடியோக்களை Storm_centre வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் போலீசார் வெள்ளம் நிறைந்த சாலையைத் தவிர்க்க மக்களை எச்சரிப்பதைக் காணலாம்.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!