அமீரக செய்திகள்

அதிவேக 5G நெட்வொர்க் பயன்பாட்டில் வளைகுடா நாடுகளில் முதலிடம் பிடித்த கத்தார்..!!

2023 ஆம் ஆண்டில், இன்டர்நெட் வேகம் அதிகமாக உள்ள வளைகுடா நாடுகளை பற்றிய புள்ளி விவரங்களை இணைய பகுப்பாய்வு நிறுவனமான ‘ஓபன்சிக்னல்’ வெளியிட்டுள்ளது. இதன்படி, வளைகுடா கூட்டுறவு கவுன்சில் (GCC) மாநிலங்களில் கத்தாரில் பதிவுசெய்யப்பட்ட 5ஜி நெட்வொர்க்கில் சராசரி டவுன்லோட் ஸ்பீடு மற்றும் அப்லோட் ஸ்பீடு மிக வேகமாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.

5G இன்டர்நெட் வேகத்தினை மதிப்பாய்வு செய்யும் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட அறிக்கையில், கிட்டத்தட்ட ஒவ்வொரு GCC நாட்டிலும் சராசரியாக 200Mbps டவுன்லோட் ஸ்பீடு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. அதிலும், வளைகுடா நாடுகளின் பட்டியலில் கத்தார் சராசரியாக 312Mbps டவுன்லோட் ஸ்பீடுடன் முதலிடத்தில் உள்ளது.

அது மட்டும் இல்லாமல், கத்தார் நாடானது 29.3Mbps அப்லோட் ஸ்பீடுடன் 5ஜி வரிசையில் முதலிடத்தில் பிடித்துள்ளது. உலகளாவிய மொபைல் நெட்வொர்க் அனுபவத்தை மதிப்பாய்வு செய்யும் Opensignal எனப்படும் நிறுவனமானது, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள மக்கள் ஆப்களை பயன்படுத்தும் வேகத்தை வைத்து நெட்வொர்க்கின் அப்லோடு மற்றும் டவுன்லோட் ஸ்பீட் கணக்கிடப்பட்டதாக தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!