அமீரக செய்திகள்

UAE: 5 வருடங்களாக தொழிலாளர்களுக்கு இலவச பல் மருத்துவம் வழங்கும் மருத்துவமனை..!! அண்டை எமிரேட்களில் இருந்தும் பயனடையும் தொழிலாளர்கள்…!!

அமீரகத்தில் ஏராளமானோர் பல் காப்பீட்டு கவரேஜின் பற்றாக்குறையை ஒரு காரணமாகக் கூறி, பற்களுக்கு தேவையான சிகிச்சை மற்றும் பராமரிப்பை கைவிடுகின்றனர். இந்நிலையில், அஜ்மானில் உள்ள ஒரு பல் மருத்துவமனை அடிப்படை பல் சிகிச்சைகளை இலவசமாக வழங்குகிறது மற்றும் மாணவர்களுக்கு பல் மருத்துவம் குறித்த பயிற்சியும் அளிக்கிறது. குறிப்பாக, இங்கு அப்பாயிண்ட்மெண்ட் தேவைப்படுவதில்லை.

அஜ்மானில் உள்ள அல் ஜுர்ஃப் நகரில் உள்ள தும்பே பல் மருத்துவமனையில் (Thumbay Dental Hospital), இலவசமாக அடிப்படை பல் சிகிச்சையைப் பெற, தொழிலாளர் அட்டையை வழங்கினாலே போதும். இங்கு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை தொழிலாளர்கள் ஸ்கேலிங் (scaling), பாலிஷிங் (polishing), ஃபில்லிங் (fillings), ரூட் கேனல் சிகிச்சைகள் (root canal treatments) மற்றும் நிலையான மற்றும் நீக்கக்கூடிய பல்வகைகளை வழங்குதல் (provision of fixed and removable dentures) போன்ற இலவச தரமான பல் மருத்துவ சேவைகளைப் பெறலாம் என கூறப்படுகின்றது.

ஏப்ரல் 2018 முதல் நடந்து வரும் இந்த முயற்சியின் மூலம், தும்பே பல் மருத்துவமனை கடந்த ஐந்து ஆண்டுகளில் அஜ்மான் மற்றும் அண்டை எமிரேட்களைச் சேர்ந்த சுமார் 23,000 தொழிலாளர்களுக்கு சேவை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொருவருக்கும் பல் பராமரிப்பு சிகிச்சை:

பெரும்பாலான ப்ளூ காலர் தொழிலாளர்கள் போதுமான பல் காப்பீடு இல்லாததால், மருத்துவர் அப்பாயின்ட்மென்ட் உட்பட முழு வாய் ஸ்க்ரீனிங் (full-mouth oral screenings) போன்ற தேவையான பல் பராமரிப்புகளை அடிக்கடி கைவிடுவதால், நிதி நிலைமையைப் பொருட்படுத்தாமல், உயர்தர பல் பராமரிப்புக்கு ஒவ்வொருவரும் தகுதியானவர்களே என்பதை தும்பே பல் மருத்துவமனை உறுதிப்படுத்துவதாக மருத்துவப் பணிப்பாளர் டாக்டர் தனவந்தி பங்கேரா என்பவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த முன்முயற்சி பல் மருத்துவ மாணவர்கள் மற்றும் வளைகுடா மருத்துவ பல்கலைக்கழகத்தின் (GMU) பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள பயிற்சியாளர்களுக்கும் பயனளிப்பதாகக் கூறப்படுகிறது.

 

இந்த சேவை குறித்து GMU வில் பல் மருத்துவப் பயிற்சியாளராக இருக்கும் பாய்சா காமின்சடா என்பவர் கூறுகையில், அவரது ஆறு வருட கற்றல் மற்றும் கல்விப் பயணம் GMU இல் உள்ள அனுபவமிக்க ஆசிரியர்களால் வழங்கப்படும் நுட்பமான பல் பயிற்சியால் பலதரப்பட்ட நோயாளிகள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் வாய்ப்பை அவருக்கு வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இங்கு ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இலவச பல்மருத்துவ சேவைகளைப் பெற்று பயனடைகின்றனர். அவர்களில் ஒருவரான ஷார்ஜாவில் வசிக்கும் கட்டுமானத் தொழிலாளி முகமது அக்ரம் என்பவர், நீண்ட நாட்களாக பல்வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், ஆனால் பல் மருத்துவரைப் பார்க்க எப்போதும் தயங்கி வந்ததாகவும் கூறியிருக்கிறார்.

 

இந்நிலையில், அவருடைய சக ஊழியர் ஒருவர் அஜ்மானில் உள்ள பல் மருத்துவமனைப் பற்றிக் கூறி, அங்கு சென்று சிகிச்சை பெறுமாறு பரிந்துரைத்துள்ளார். அதனையடுத்து, ஒரு நாள் வேலையிலிருந்து விடுமுறை எடுத்துக் கொண்ட அக்ரம், தும்பே பல் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

மேலும், அங்கிருந்த பல் மருத்துவர் அவருக்கு ரூட் கேனல் சிகிச்சையை செய்ததாக அக்ரம் தெரிவித்துள்ளார். அத்துடன் இலவச பல் மருத்துவ சேவைகளுக்காக GMU மற்றும் தும்பை பல் மருத்துவமனைக்கு நன்றி கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!