அமீரக செய்திகள்

அமீரகத்தில் தொடரும் கனமழை!! குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தல்…

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) சனிக்கிழமை வரை நாட்டின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் சில பகுதிகளில், குறிப்பாக கிழக்கு, தெற்கு மற்றும் சில உள் பகுதிகள் மற்றும் அல் தஃப்ரா பகுதிகளில் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. மேலும்  இப்போது, ​​ஒரு புதிய ஆலோசனையில், தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம், சீரற்ற காலநிலையின் போது எச்சரிக்கையாக இருக்கவும், அதிகாரப்பூர்வ அறிக்கைகளைப் பின்பற்றவும் குடியிருப்பாளர்களை வலியுறுத்தியது.

மேலும் குறிப்பாக துபாய், அல் ஐன், ஷார்ஜா மற்றும் ஃபுஜைரா ஆகிய பகுதிகளில் வரும் நாட்களில் மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நேற்று (புதன்கிழமை) ஷார்ஜாவின் சில பகுதிகளில் மாலை கனமழை பதிவாகியுள்ளது. NCM வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின் படி, அமீரகம் முழுவதும் குறிப்பாக ஷார்ஜா மற்றும் அல் அய்ன் போன்ற நாட்டின் உள் மற்றும் கிழக்கு பகுதிகளில் வானிலை மேகமூட்டமாகக் காணப்பட்டுள்ளது.

மேலும், ஷார்ஜாவின் அல் ஃபயா மற்றும் மலிஹா சாலை போன்ற பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது. அதுமட்டுமின்றி, ஃபுஜைரா மற்றும் தெற்கு பகுதிகளான அபுதாபி மற்றும் அல் அய்ன் போன்ற பகுதிகளிலும் மேகமூட்டமான வானிலை மற்றும் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை ஆகஸ்ட் 12, சனிக்கிழமை வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக NCM வெளியிட்ட வானிலை முன்னறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!