அமீரக செய்திகள்

UAE: புத்தாண்டு வான வேடிக்கைகளை கடலுக்கு நடுவில் கண்டு களிக்க அரிய வாய்ப்பு…!!! எப்படி முன்பதிவு செய்வது..?? கட்டணம் எவ்வளவு..??

துபாயில் புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வளவு கோலாகலமாக இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம்.. வான வேடிக்கை, லேசர் ஷோ, விதவிதமான நிகழ்ச்சிகள் என சொல்லிக்கொண்டே போகலாம்.. அதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிக ஆர்வத்துடன் கண்டு களிப்பது வான வேடிக்கைகள் தான்.. அதனை கடலுக்கு நடுவில் இருந்து பார்த்தால் எப்படி இருக்கும்..??  நம்மில் பலருக்கும் அந்த எண்ணத்தை செயலாக்க ஆசைதான்..

அவர்களுக்காகவே துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) துபாய் ஃபெர்ரி, வாட்டர்பஸ் மற்றும் ஆப்ரா போன்ற கடல் போக்குவரத்து முறைகளில் இருந்து இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தைக் காண சிறப்பு சலுகைகள் மற்றும் பிரீமியம் சேவைகளை அறிவித்துள்ளது.

இதன் மூலம் புகழ்பெற்ற புர்ஜ் கலீஃபா, துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி, புர்ஜ் அல் அரப், அட்லாண்டிஸ், ப்ளூ வாட்டர் மற்றும் துபாய் கடற்கரையில் அமைந்துள்ள ஜுமைரா பீச் டவர்களில் நடைபெறும் பிரமிக்க வைக்கும் வானவேடிக்கைகளை கடலின் நடுவில் இருந்து பார்க்க வழிவகை செய்து கடல்வழிப் பயணிகளுக்கு மறக்க முடியாத நினைவுகளை உங்களுக்கு தர RTA ஏற்பாடு செய்துள்ளது.

நேரங்கள்

துபாய் ஃபெர்ரி புத்தாண்டு தொடங்கவிருக்கும் டிசம்பர் 31 ம் தினத்தன்று இரவு 10 மணிக்கு தொடங்கி, மறுநாள் அதிகாலை 1.30 மணி வரை தொடரும். வாட்டர்பஸ் மற்றும் ஆப்ரா பயணங்கள் இரவு 10.30 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு முடிவடையும்.

கட்டணங்கள்

ஆப்ரா: இது மெரினா மால் ஸ்டேஷன்,  (துபாய் மெரினா), அல் ஜதஃப், துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மற்றும் அல் குபைபா மரைன் நிலையங்களில் இருந்து பயணங்களை துவங்கும். இதில் பயணிக்க பெரியவர்களுக்கு 125 திர்ஹம் கட்டணம் மற்றும் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்கலாம்.

துபாய் ஃபெர்ரி: மெரினா மால் (துபாய் மெரினா), அல் குபைபா மற்றும் அல் சீஃப் நிலையங்களில் (துபாய் க்ரீக்) பயணிக்க தொடங்கும். இதில் பயணிக்க சில்வர் கிளாஸிற்கு 300 திர்ஹமும், கோல்ட் கிளாஸிற்கு 450 திர்ஹமும் கட்டணமாகும். இரண்டு முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடியும், இரண்டு வயதுக்கு குறைவானவர்கள் இலவசமாகவும் பயணிக்கலாம்.

எப்படி முன்பதிவு செய்வது??

RTA இன் கட்டணமில்லா எண்ணான 8009090 ஐ அழைக்கவும் அல்லது [email protected] க்கு மின்னஞ்சல் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!