அமீரக செய்திகள்

துபாயில் ‘ஈத் அல் ஃபித்ர்’ சிறப்பு வானவேடிக்கை நடக்கவுள்ள 7 இடங்கள்..!! தேதிகளும், நேரங்களும் இதோ…

புனித ரமலான் மாதம் முடிவடைய இன்னும் ஓரிரு நாட்களே இருப்பதால், இஸ்லாமியர்கள் அனைவரும் ஈத் அல் பித்ர் எனும் நோன்புப் பெருநாளை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றனர். அமீரக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, பிறை தென்படும் தேதியைப் பொறுத்து, தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு ஈத் அல் பித்ர் பண்டிகையைக் கொண்டாட ஒன்பது நாட்கள் வரை விடுமுறை கிடைக்கும்.

அதிலும் இந்த வருடத்தின் முதல் நீண்ட நாட்கள் விடுமுறையாக இது வரவிருப்பதால் அமீரகக் குடியிருப்பாளர்கள் அனைவரும் மிக உற்சாகத்துடன் இந்த பொது விடுமுறையை தங்களது குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடத் தயாராகி வருகின்றனர். அவ்வாறு எதிர்வரும் நீண்ட வார இறுதியில் விடுமுறையை கொண்டாட குடியிருப்பாளர்களுக்காகவே துபாயில் பிரம்மிப்பூட்டும் நிகழ்ச்சிகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

ரமலான் தொடங்கியதிலிருந்து துபாயில் சில இடங்கள் வழக்கமான வானவேடிக்கை நிகழ்ச்சிகளால் ஜொலித்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது ஈத் அல் பித்ர் பெருநாளை முன்னிட்டு பின்வரும் எமிரேட்டின் முக்கிய அடையாளங்களில் நடைபெறும் பிரமாண்டமான வானவேடிக்கை காட்சிகளையும் மக்கள் அனுபவிக்கலாம்.

குளோபல் வில்லேஜ்:

துபாயின் மிகவும் பிரபலமான பன்முகக் காலச்சாரத்தின் அடையாளமான குளோபல் வில்லேஜ், ஈத் அல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு வண்ணமயமான விளக்குகளாலும், பண்டிகை அலங்காரங்களாலும் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும் இங்கு தினசரி நடைபெறும் 200 க்கும் மேற்பட்ட கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் வரிசையில் பார்வையாளர்கள் தினசரி இசை வாணவேடிக்கைகளை கண்டுகளிக்கலாம்.

  • வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும் தேதிகள்: ஏப்ரல் 10-14
  • நேரம்: இரவு 9 மணி

துபாய் பார்க்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ்:

த்ரில்லிங்கான சவாரிகள், மகிழ்ச்சியான விருந்துகள் தவிர, துபாய் பார்க்ஸ் அண்ட் ரிசார்ட்ஸில் ஈத் அல் பித்ருக்கு ஒரு பெரிய கொண்டாட்டம் நடைபெறவிருக்கிறது. இங்கு செல்லும் விருந்தினர்கள் திரில்லிங்கான ஏலியன் பரேட், நடனம் ஆடும் விண்வெளி வீரர்கள், சிறப்புச் செயல்கள் இடம்பெறும் புத்தம் புதிய நிகழ்ச்சி மற்றும் வெளிப்புறக் கேளிக்கைகள் ஆகியவற்றைக் கண்டு மகிழலாம்.

  • ஈத் கொண்டாட்ட தேதி: ஏப்ரல் 10-12
  • வானவேடிக்கை நடைபெறும் தேதி: ஈத் முதல் இரவு
  • இது தவிர தினசரி லேசர் ஷோக்கள் ஒவ்வொரு இரவும் மூன்று முறை வானத்தை ஒளியூட்டும்.

துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால்:

துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால் என்ற வாட்டர்ஃப்ரன்ட் இலக்கில் குழந்தைகளுக்கு திகைப்பூட்டும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

  • பட்டாசு வெடிக்கும் தேதி: ஏப்ரல் 10
  • நேரம்: இரவு 8 மணி

ஹத்தா: 

துபாயில் உள்ள ஹத்தாவில் நடைபெற உள்ள ஈத் வானவேடிக்கை காட்சியை சாலைப் பயணத்திற்குச் செல்பவர்கள் கூட கண்டு மகிழலாம். நீங்கள் ஹத்தாவின் கம்பீரமான மலைகளுக்குச் செல்கிறீர்கள் என்றால், இயற்கையோடு கூடிய நிகழ்ச்சியைத் தவறவிடாதீர்கள்.

  • வானவேடிக்கை நடைபெறும் நாள்: ஏப்ரல் 10
  • நேரம்: இரவு 8 மணி

அல் சீஃப்

ஈத் அல் பித்ரின் முதல் நாளில் அனைத்து பட்டாசு நிகழ்சிகளையும் நீங்கள் தவறவிட்டால், அல் சீஃப் என்ற வரலாற்றுப் பகுதியில் அவற்றைக் கண்டுகளிக்க உங்களுக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கும்.

  • வானவேடிக்கை நடைபெறும் தேதி: ஏப்ரல் 11
  • நேரம்: இரவு 8 மணி

ப்ளூவாட்டர்ஸ் ஐலேண்ட்

துபாயின் பிரபலமான ப்ளூவாட்டர்ஸில் நடைபெறும் வானவேடிக்கை காட்சியை அங்கிருக்கும் உணவகத்தில் இருந்தவாறே நீங்கள் கண்டுமகிழலாம்.

  • வானவேடிக்கை நடைபெறும் தேதி: ஏப்ரல் 12
  • நேரம்: இரவு 8 மணி

தி பீச், JBR

கடற்கரையில் வானவேடிக்கை நிகழ்சிகளைக் காண்பது அலாதியான அனுபவத்தைக் கொடுக்கும். எனவே, நீங்கள் JBR இல் பட்டாசுகளைப் பார்க்கத் திட்டமிட்டிருந்தால் சிறந்த இடத்தைப் பெறுவதற்கு முன்னதாகவே அங்கு செல்லுங்கள்.

  • வானவேடிக்கை நடைபெறும் நாள்: ஏப்ரல் 12
  • நேரம்: இரவு 8 மணி

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!