அமீரக செய்திகள்

அமீரகத்தில் விசா மோசடி செய்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை.. நாடு கடத்தவும் உத்தரவிடப்படும்..!! எச்சரித்த பொது வழக்குத்துறை….!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியிருப்பாளர்கள் போலியான விசா அல்லது குடியிருப்பு அனுமதி வைத்திருப்பது கண்டறியப்பட்டால், கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று துபாய் பொது வழக்குத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து ஆகஸ்ட் 16 அன்று, துபாய் பொது வழக்குத்துறை அதன் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கில் வெளியிட்ட பதிவில், குடியிருப்பு அனுமதி அல்லது விசா போன்ற அதிகாரப்பூர்வ ஆவணத்தை போலியாக உருவாக்கிய எவரும் அல்லது அது போலியானது என்று தெரிந்தும் அதை பயன்படுத்துபவர்களும் 10 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்று குறிப்பிட்டிருந்தது.

2021 ஆம் ஆண்டின் ஃபெடரல் ஆணைச் சட்டம் எண். 29 இன் பிரிவு 24இன் படி, வெளிநாட்டினரின் விசா மற்றும் ரெசிடென்ஸி மோசடிக்கு எதிராக இந்த 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.

போலி ஆவணம் தயாரிப்பது ஒரு குற்றமாக அங்கீகரிக்கப்பட்ட ஃபெடரல் ஆணைச் சட்டம் எண். 31 2021 – ஃபெடரல் பீனல் கோட் பிரிவு 251இல், போலியான ஆவணங்கள் பற்றியும் தண்டனைகள் பற்றியும் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை துபாயை தளமாகக் கொண்ட OGH லீகல் என்ற சட்ட நிறுவனத்தின் கூட்டாளியான ஹரி வாத்வானா என்பவர் விவரித்துள்ளார்.

அவர் அளித்துள்ள விளக்கத்தின் படி, போலியான ஆவணம் என்பது பின்வரும் வழிகளில் இருக்கலாம்:

>> ஆவணத்தின் எழுத்தை நீக்கி அல்லது மாற்றுவதன் மூலம் அல்லது ஆவணத்தில் உள்ள எண்கள், மதிப்பெண்கள் அல்லது படங்களை மாற்றுவதன் மூலம் ஆவணம் போலியாக உருவாக்கப்படுகிறது.

>> போலி கையொப்பம் அல்லது முத்திரையை வைப்பது அல்லது உண்மையான கையொப்பம், முத்திரை அல்லது கைரேகையை மாற்றுவது போலியான ஆவணமாகக் கருதப்படுகிறது.

>> ஆவணத்தின் உள்ளடக்கம் பற்றி தெரியாமல் அல்லது சரியான ஒப்புதல் இல்லாமல் ஒரு நபரின் கையொப்பம், முத்திரை அல்லது கைரேகையை மோசடி செய்து பெறுவது.

>> ஒரு போலி ஆவணத்தை உருவாக்குதல் அல்லது ஒரு ஆவணத்தைப் பின்பற்றுதல் மற்றும் அதை மூன்றாம் தரப்பினருக்குக் கூறுதல்.

>> ஒரு நபரின் ஒப்புதலின்றி, கையொப்பம் அல்லது முத்திரை அல்லது கைரேகை கொண்ட வெற்று காகிதத்தை நிரப்புதல்.

>> அத்தகைய நோக்கத்திற்காக ஒரு ஆவணத்தில் தவறான ஆள்மாறாட்டம் அல்லது அடையாளத்தை மாற்றுதல்.

>> ஆவணத்தில் உள்ள உண்மையை மாற்றியமைத்தல்.

அதேசமயம், போலி ஆவணம் குறித்து ஃபெடரல் பீனல் கோட் பிரிவு 252இல், ஒரு பொது அதிகாரி அல்லது பொது அலுவலகத்திலிருந்து வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ ஆவணங்களை போலியாக்கினால், 10 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மோசடி செய்பவர் அமீரகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்றால், அத்தகைய நபர் நாடு கடத்தல் உத்தரவுக்கு உட்படுத்தப்படலாம் என்பதை பிரிவு 126 உறுதிப்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!