ADVERTISEMENT

சுற்றுலா துறையில் தொடர்ந்து ஏற்றம் காணும் கத்தார்… பயணிகளின் எண்ணிக்கை சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் 91.4% அதிகரிப்பு..!!

Published: 4 Sep 2023, 6:45 PM |
Updated: 4 Sep 2023, 6:58 PM |
Posted By: admin

உலகின் பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டில் சுற்றுலா துறையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. அவற்றில் கத்தார் நாட்டின் சுற்றுலா துறையை பொறுத்த வரை, சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையானது கணிசமாக அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

ADVERTISEMENT

இந்த ஆண்டில் இதுவரை கத்தார் நாட்டிற்கு வருகை தந்த மொத்த பயணிகளின் எண்ணிக்கையானது 288,000 தாண்டி உள்ளது எனவும், கடந்த ஆண்டு ஜூன் 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு ஜூன் 2023 ஆம் ஆண்டில் 91.4% பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

திட்டமிடல் மற்றும் புள்ளியியல் ஆணையத்தால் (PSA) வெளியிடப்பட்ட மாதாந்திர புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்த புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கத்தாருக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளில் 47 சதவீதம் பேர் வளைகுடா நாடுகளில் இருந்து வருகை புரிந்தவர்கள் எனவும், இதில் அதிகப்படியான சுற்றுலாவாசிகள் விமான பயணம் வழியாக நாட்டினை அடைந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் மாதாந்திர புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஒரு மாதத்தில் இருந்து மற்றொரு மாதத்திற்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2.1% அதிகரித்துக் கொண்டு வருவதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதேபோல் வங்கி துறையைச் சார்ந்த புள்ளி விவரங்களையும் வெளியிட்டுள்ளது.

வங்கி துறையை கணக்கில் எடுத்துக் கொள்ளும் பொழுது மொத்த பரந்த பண விநியோகமானது ஜூலை 2023 இல் சுமார் 684 பில்லியன் கத்தாரி ரியால்களைப் பதிவு செய்துள்ளது. இது ஜூலை 2022 உடன் ஒப்பிடும்போது 1.3 சதவீதம் அதிகமாகும். விபத்துக்கள் பற்றிய புள்ளி விவரங்களை கூறும்பொழுது, ஜூலை 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 595 போக்குவரத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும், இந்த எண்ணிக்கையானது சென்ற 14.3 சதவீதம் குறைந்துள்ளது எனவும் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ADVERTISEMENT