அமீரக செய்திகள்

UAE ரமலான் 2022: புர்ஜ் கலீஃபாவில் தினசரி சொல்லப்படும் பாங்கு..!!

இஸ்லாமியர்கள் தொழுவதற்காக அழைப்பு விடுக்கப்படும் அஸான் எனும் பாங்கு இப்போது உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் ஒளிபரப்பப்படுகிறது.

ரமலான் மாதத்தின் சிறப்புக் காட்சியாக, புர்ஜ் கலீஃபா ஒவ்வொரு நாளும் சிறப்பு பாங்கு நிகழ்ச்சியுடன் ஒளிர்கிறது.

மக்ரிப் (இரவு) மற்றும் இஷா (இரவு) தொழுகை நேரங்களில் இந்த சிறப்பு காட்சி ஒளிபரப்பப்படுகிறது. புர்ஜ் கலீஃபாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு ட்வீட்டில், “மாதம் முழுவதும் பல்வேறு இமாம்களால் இந்த பாங்கு சொல்லப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தில் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி ரமலான் மாதம் தொடங்கியதை முன்னிட்டு இஸ்லாமியர்கள் அனைவரும் நோன்பு வைத்து வருகின்றனர். கொரோனா பாதிப்பால் கடந்த இரு ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முடிந்த இரண்டு ரமலான் மாதங்களையடுத்து இந்த வருட ரமலான் மாதத்தில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மசூதிகள் சமூக இடைவெளியுடன் தராவீஹ் தொழுகையை மேற்கொள்ளுதல், இஃப்தால் கூடாரங்களுக்கு அனுமதி ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!