பார்க்கிங் டிக்கெட்டை ஆட்டோ-ரினியூவல் செய்யும் RTA துபாய் ஆப்..!! அனைத்து விபரங்களும் இங்கே..!!
துபாயில் உங்கள் பார்க்கிங் டிக்கெட்டை ரினியூவல் செய்யத் தவறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறீர்களா? இனி அந்த கவலை வேண்டாம், துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) அதிகாரப்பூர்வ ஸ்மார்ட் அப்ளிகேஷனான ‘RTA துபாய்’ தானாக புதுப்பித்தல் (auto-renewal) என்ற விருப்பத்தை குடியிருப்பாளர்களுக்கு வழங்குகிறது.
மேலும், அமீரகத்தில் உள்ள மற்றொரு எமிரேட் அல்லது மற்றொரு GCC நாட்டில் கார் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அவர்களும் இந்த பயன்பாட்டைப் பயன்படுத்தலாம் எனவும் RTA தெரிவித்துள்ளது.
எனவே உங்கள் அபராதங்களைத் தவிர்க்க RTA வழங்கும் இந்த சேவையை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்கான படிப்படியான வழிகாட்டி பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:
கணக்கை உருவாக்குதல்:
— முதலில் நீங்கள் “RTA DUBAI” பயன்பாட்டை டவுன்லோட் செய்து, உங்களுக்கான RTA கணக்கை உருவாக்க வேண்டும்.
— உங்களுக்கென கணக்கு உருவாக்குவதற்கு அப்ளிகேஷனை திறந்ததும் ‘Login/Register’ என்பதைத் தட்டவும். உங்களிடம் ஏற்கனவே UAE பாஸ் கணக்கு அல்லது RTA கணக்கு இருந்தால், இந்த இரண்டு கணக்குகளில் ஒன்றைப் பயன்படுத்தி உள்நுழையலாம். இல்லையெனில், ‘register’ என்பதைக் கிளிக் செய்து, பின்வரும் படிகள் மூலம், உங்கள் கணக்கை உருவாக்கவும்.
- உங்கள் பயனர் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட்டு, கடவுச் சொல்லை உறுதிப்படுத்தவும்.
- பின்னர், உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு கிடைக்கும் OTPயை உள்ளிடவும். இந்த OTPயை நீங்கள் உள்ளிட்டதும், நீங்கள் உள்நுழைய முடியும்.
- அடுத்து, இரண்டு-படி சரிபார்ப்பு (two-step verification) செயல்முறையாக உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். உங்கள் கணக்கு சரிபார்க்கப்பட்டதும் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் செல்லலாம்.
பார்க்கிங் கட்டணம் செலுத்துதல்:
— பயன்பாட்டின் முகப்புப் பக்கத்தில் உள்ள ‘parking’ என்ற தேர்வை கிளிக் செய்து, ‘Pay public parking fees’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
— இந்த ஆப் நீங்கள் இருக்கும் பார்க்கிங் மண்டலத்தை தானாகவே கண்டறியும். மேலும், நீங்கள் மேப்பில் பின்னை நகர்த்துவதன் மூலமோ அல்லது மண்டல எண்ணை தேடுவதன் மூலமோ பார்க்கிங் மண்டலத்தை தேர்ந்தெடுக்கலாம்.
— பார்க்கிங் மண்டல நேரங்கள் மற்றும் மணிநேர எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கிங் கட்டணங்கள் பற்றிய விவரங்களை ஆப்ஸ் உங்களுக்கு வழங்கும். அவற்றைச் சரிபார்த்த பிறகு, ‘Ready to pay?’ என்பதைத் தட்டவும்.
— அடுத்தபடியாக, ‘manage vehicles’ என்பதைத் தட்டி, உங்கள் வாகனத்தின் பிளேட் நம்பர் கார் பதிவுசெய்யப்பட்ட எமிரேட் போன்ற விவரங்களை உள்ளிடவும்.
— தொடர்ந்து உங்கள் பார்க்கிங்கின் கால அளவைத் தேர்ந்தெடுத்து, ‘pay’ என்பதைக் கிளிக் செய்தவுடன் பார்க்கிங் டிக்கெட் பற்றிய விபரங்களை ஆப் வழங்கும்.
ஆட்டோ-ரினியூவல் சேவையைப் பெறுதல்:
— நீங்கள் செல்லும் இடத்தில் உங்களுக்கு உங்களுக்கு அதிக நேரம் எடுக்குமா என்று தெரியவில்லை எனும்போது, நீங்கள் ஒரு மணிநேரத்திற்கு பார்க்கிங் கட்டணம் செலுத்த விரும்பினால், ‘auto renewal’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
— ‘ticket auto renewal’ என்ற சேவையை தேர்வு செய்யவும். இந்தத் தேர்வை உறுதிசெய்யவா என்று செயலியில் கேட்கப்படும். அப்போது, ‘continue’ என்பதைக் கிளிக் செய்யவும்.
— இப்போது, உங்கள் டிக்கெட் தானாகவே புதுப்பிக்கப்படும், மேலும் காலாவதியான டிக்கெட்டுக்கு அபராதம் விதிக்கப்படுவதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
தானாக புதுப்பிப்பதை நிறுத்த:
— உங்கள் பார்க்கிங் டிக்கெட்டை தானாக புதுப்பிப்பதை முடக்க, பயன்பாட்டை மீண்டும் ஒருமுறை திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள ‘parking’ விருப்பத்தைத் தட்டவும். அதன் பிறகு ‘auto renewal’ விருப்பத்தை ஆஃப் செய்து விட்டு இறுதியாக உங்கள் தேர்வை உறுதிப்படுத்தவும்.