அமீரக செய்திகள்

துபாய்: ஓட்டுநர் பயிற்சி வகுப்புக்கு செல்லாமலேயே லைசென்ஸ் பெறுவது எப்படி..?? மூன்று வழிகள் இதோ…!!

நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் டிரைவிங் லைசென்ஸ் பெற வேண்டுமெனில், அதற்கான பாடங்களைப் படித்து பயிற்சி பெற்று, பின்னர் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இருப்பினும், அமீரக டிரைவிங் லைசென்சிற்காக உங்களிடம் ஏற்கனவே உள்ள டிரைவிங் லைசென்சையும் மாற்றிக்கொள்ளலாம், அதாவது பயிற்சிகள் எடுக்கத் தேவையில்லாமல் நேரடியாக சோதனைக்குச் செல்லலாம். இது குறித்த தகவல்களை கீழே காணலாம்.

கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கான டிரைவிங் லைசென்ஸ்:

உங்களிடம் கோல்டன் விசா இருந்தால், நீங்கள் நேரடியாக எழுத்து முறை (theory) மற்றும் சாலை சோதனைக்கு வின்னப்பிக்கலாம். மேலும், இந்த இரண்டு சோதனைகளிலும் நீங்கள் தேர்ச்சி பெற்றால், அமீரக டிரைவிங் லைசென்ஸைப் பெறலாம். ஆனால், செயல்முறையைத் தொடங்க நீங்கள் முதலில் துபாயில் உள்ள டிரைவிங் பயிற்சி நிறுவனங்களின் பதிவு செய்ய வேண்டும்.

செலவு

  • டிராஃபிக் கோப்பைத் (traffic file) திறப்பதற்கு 200 திர்ஹம்.
  • மேனுவல் கையேடுக்கு 50 திர்ஹம்.
  • எலெக்ட்ரானிக் கண் பரிசோதனைக்கு 140 திர்ஹம் முதல் 180 திர்ஹம் வரை.
  • சோதனைக் கட்டணம் 200 திர்ஹம்.
  • டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதற்கு 300 திர்ஹம். நீங்கள் பதிவு செய்யும் டிரைவிங் ஸ்கூலைப் பொறுத்து ஒட்டுமொத்த செலவு மாறுபடும்.

2. உங்கள் மற்ற நாட்டின் டிரைவிங் லைசென்ஸை அமீரக லைசென்ஸாக மாற்றலாம்

உங்களிடம் சொந்த நாட்டின் டிரைவிங் லைசென்ஸ் இருக்கும் பட்சத்தில், டிரைவிங் ஸ்கூல் அல்லது சோதனைகள் எதுவுமின்றி அமீரக லைசென்ஸாக மாற்ற முடியும்.

அதாவது GCC நாடுகள், UK, கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட 43 நாடுகளில் வழங்கப்பட்ட டிரைவிங் லைசென்ஸ்கள் வைத்திருந்தால் அமீரகத்தில் எவ்வித சோதனையுமின்றி அமீரக லைசென்ஸாக மாற்றிக்கொள்ளலாம்.

தேவையான ஆவணங்கள்:

  • குறிப்பிட்ட நாடுகளில் வழங்கப்பட்டுள்ள அசல் டிரைவிங் லைசென்ஸ்.
  • இ-கண் பரிசோதனை.
  • செல்லுபடியாகும் அசல் ஐடி.
  • லைசென்சின் சட்டப்பூர்வ மொழிபெயர்ப்பு (ஆங்கிலம் அல்லது அரபு மொழியில் இல்லை என்றால்).

3. ‘கோல்டன் சான்ஸ்’ டிரைவிங் டெஸ்ட்:

உங்களிடம் கோல்டன் விசாவும் இல்லை மற்றும் லைசென்ஸ் மாற்றத்திற்கு பட்டியலிடப்பட்ட குறிப்பிட்ட நாட்டிலிருந்து வழங்கப்பட்ட டிரைவிங் லைசென்சும் இல்லையென்றால், பயிற்சி வகுப்புகளுக்கு செல்லாமலேயே டிரைவிங் லைசென்ஸைப் பெறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளின் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவர்களுக்கு இது பொருந்தும்.

RTA இன் ‘கோல்டன் சான்ஸ்’ முயற்சியின் கீழ், வெளிநாட்டவர்கள் டிரைவிங் வகுப்புகளில் கலந்து கொள்ளாமல் நேரடியாக எழுத்துத் தேர்வு மற்றும் டிரைவிங் பரிசோதனையை மேற்கொள்ள முடியும்.

இருப்பினும் இந்த சோதனைகளில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் தோல்வியுற்றால், லைசென்ஸ் பெறுவதற்கான வழக்கமான செயல்முறையை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

செலவு:

இதில் தோராயமாக மொத்த செலவு 2,000 திர்ஹம் வரை ஆகும். இருப்பினும், டிரைவிங் லைசென்ஸ் விவரங்கள் மற்றும் டிரைவிங் ஸ்கூல்களின் அடிப்படையில் செலவு மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!