அமீரக செய்திகள்

ஒருமுறை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 8 மணி நேரம் இயங்கும்..!! துபாய் முனிசிபாலிட்டி அறிமுகம் செய்துள்ள ஓட்டுநர் இல்லாத கிளீனிங் வாகனங்கள்..!!

துபாய் முனிசிபாலிட்டி சைக்கிள் டிராக்குகளை சுத்தம் செய்ய புதிய ஓட்டுநர் இல்லாத செல்ஃப் டிரைவிங் எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக சமூக ஊடக தளத்தில் அறிவித்துள்ளது.

மேலும், இந்த எலெக்ட்ரிக் வாகனங்கள் துபாயில் உள்ள கடற்கரைகளைச் சுற்றியுள்ள சைக்கிள் டிராக்குகளை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளது.

இத்திட்டம் எமிரேட்டில் உள்ள அனைத்து பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களின் தூய்மை மற்றும் அழகியல் தோற்றத்தை பராமரிப்பதற்கும், கழிவுகளை திறம்பட மேலாண்மை செய்வதற்கும் முனிசிபாலிட்டி மேற்கொள்ளும் மூலோபாய முயற்சிகளின் ஒரு பகுதியாக வருகிறது என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, ஜுமைரா மற்றும் உம் சுகீம் கடற்கரைகளில் சைக்கிள் ஓட்டும் பாதைகளை சுத்தம் செய்வதற்காக எலெக்ட்ரிக் வாகனத்தை சோதனை செய்வதாக முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது.


இந்த கிளீனிங் வாகனத்தில், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் கார்பன் உமிழ்வைக் குறைக்க ஆட்டோமேட்டட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் உள்ளிட்ட சமீபத்திய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓட்டுநர் இல்லாத வாகனத்தின் அம்சங்கள்:

சிறிய டிரக் போல காட்சியளிக்கும் கிளீனிங் வாகனங்களின் முன்புறத்தில் ரோட்டரி கிளீனிங் பிரஷ்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாகனத்தில் சென்சார்கள் பொருத்தப்பட்டிருப்பதால், அதைக் கட்டுப்படுத்த டிரைவர் தேவையில்லை. அவை சாலைகளைக் கடப்பவர்களைக் கண்டறிந்து, மோதலைத் தவிர்க்க தானாகவே பிரேக்கைப் பயன்படுத்தும் என்று கூறப்படுகிறது.

மனித உழைப்புடன் ஒப்பிடும்போது, இது அதிக உற்பத்தித்திறனுடன் ஒருமுறை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 8 மணி நேரம் சுத்தம் செய்கிறது மற்றும் மணிக்கு 40 கிமீ வேகத்தில் இயங்க முடியும். இவை எலெக்ட்ரிக் வாகனம் என்பதால், இது கார்பன் உமிழ்வை ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!