அமீரக செய்திகள்

உலகளவில் செழிப்பாக வாழ்வதற்கும், வேலை செய்வதற்குமான சிறந்த 10 நகரங்களில் இடம்பிடித்த துபாய்..!!

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தனக்கென ஒரு அடையாளத்தையும் வருமானத்தையும் வேண்டி பலர் அமீரகத்திற்கு வருகிறார்கள். பெரும்பாலானோரின் இத்தகைய கனவை நனவாக்கி உலகளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடிய நாடாக அமீரகம் திகழ்ந்து வருகின்றது. இந்நிலையில் Resonance எனும் தரவு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, வாழ்வதற்கும், செழிப்பதற்கும் உகந்த உலகின் முதல் 10 சிறந்த நகரங்களின் பட்டியலில் அமீரகத்தில் உள்ள நகரமான துபாய் இடம்பிடித்துள்ளது.

இந்தப் பட்டியலில் லண்டன் முதலிடத்திலும், பாரீஸ், நியூயார்க், டோக்கியோ, சிங்கப்பூர், துபாய், சான் பிரான்சிஸ்கோ, பார்சிலோனா, ஆம்ஸ்டர்டாம், சியோல் ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

இவற்றில் சான் பிரான்சிஸ்கோ, ஆம்ஸ்டர்டாம், லாஸ் ஏஞ்சல்ஸ், வாஷிங்டன், இஸ்தான்புல், வியன்னா, டொராண்டோ, பாஸ்டன், மெல்போர்ன், சூரிச், சிட்னி போன்ற நகரங்களை விடவும் துபாய் வாழவும், வேலை செய்யவும், செழிக்கவும் சிறந்த நகரமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தரவரிசைப் பட்டியலானது, ஒரு நகரத்தின் வாழ்வாதாரம், அன்பான தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றின் முக்கிய குறியீடுகளின் அடிப்படையில் மட்டுமல்லாமல், நகரத்தின் நடைப்பயணம், காட்சிகள் மற்றும் அடையாளங்கள், பூங்கா மற்றும் பொழுதுபோக்கு, விமான நிலைய இணைப்பு, அருங்காட்சியகங்கள், இரவு வாழ்க்கை, உணவகங்கள், ஷாப்பிங், இடங்கள், கல்வி, 500 குளோபல் நிறுவனங்கள், மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் போன்றவற்றின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வாழ்வதற்கு ஏற்ற பிராந்திய நகரங்களில், அபுதாபி அரபு உலகில் இரண்டாவது இடத்திலும், உலகளவில் 25 வது இடத்திலும் உள்ளது. இந்த உலகளாவிய பட்டியலில் ரியாத் (28), தோஹா (36), குவைத் (58) மற்றும் மஸ்கட் (89) ஆகியவை அடுத்தடுத்த வரிசையில் இடம்பிடித்துள்ளன.

துபாயின் உள்கட்டமைப்பு பற்றி Resonance வெளியிட்ட அறிக்கையில், அட்லாண்டிஸின் தாயகமான பாம் ஜுமைரா, உலகின் மிக உயரமான புர்ஜ் கலீஃபா என துபாய் தொடர்ந்து உலக சாதனைகளை முறியடிப்பதை ஒரு தேசிய பொழுதுபோக்காக மாற்றியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, ஹாலிவுட், பாலிவுட், மார்வெல் மற்றும் லெகோவுக்கு மரியாதை செலுத்தும் துபாயின் டிஸ்னிஃபைட் வாட்டர் ப்ளேகிரவுண்டுகள், எண்ணற்ற மால்கள், அக்வாரியம், உட்புற பனிச்சறுக்கு பூங்காக்கள், நடன நீரூற்றுகள், ஃபேண்டஸி தீம் பூங்காக்கள் மற்றும் எக்கச்சக்க ரெசார்ட்டுகள் என ஏராளமான ஈர்ப்புகளைக் கொண்டுள்ள துபாய் 8வது இடத்தைப் பிடித்ததில் ஆச்சரியமில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!