அமீரக சட்டங்கள்அமீரக செய்திகள்

அமீரக விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது சிக்கலை எதிர்கொண்டால் புகார் அளிப்பது எப்படி? முழுவிபரமும் உள்ளே..

ஐக்கிய அரபு அமீரகத்தின் விசிட் விசாவிற்கு விண்ணப்பிப்பதில் ஏதேனும் சிக்கல்களை எதிர்கொள்கிறீர்களா? அப்படியானால், நீங்கள் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டியின் (ICP) இணையதளத்தில் ‘Customer Voice Gateway’ எனும் சேவை மூலம் ஆன்லைனில் அது குறித்து புகார் தெரிவிக்கலாம்.

‘Customer Voice Gateway’ என்பது வாடிக்கையாளர்கள் புகார்களைச் சமர்ப்பிப்பதற்கும், பின்னர் புகாரின் நிலையை அறிந்து கொள்வதற்கும் உதவும் ஒரு சீரான அமைப்பு என்று ICP தெரிவித்துள்ளது. மேலும், நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட டைப்பிங் சென்டர் மூலம் உங்கள் விசா அல்லது எமிரேட்ஸ் ஐடிக்கு விண்ணப்பித்தாலும் இந்த சேவையைப் பயன்படுத்தலாம் எனவும் ICP கூறியுள்ளது.

ICP இல் புகார் செய்வது எப்படி?

படி 1: ஆன்லைனில் விண்ணப்பத்தை நிரப்புதல்

நீங்கள் முதலில் https://cc.icp.gov.ae/ என்ற லிங்க் மூலம் இணையதளத்திற்குச் சென்று, ‘Create a New Ticket’ என்ற விருப்பத்தைக் கிளிக் செய்யவும். அடுத்ததாக, பின்வருமாறு விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்:

A. விண்ணப்பதாரரின் தகவல்களை உள்ளிடுதல்:

— உங்களின் முழுப்பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை உள்ளிடவும். பின்னர் அதில் குடிமகன், குடியிருப்பாளர், பார்வையாளர் (visitor/Tourist) அல்லது GCC குடிமகன் என்பதில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

— அதைத் தொடர்ந்து, உங்கள் நாட்டை தேர்ந்தெடுக்கவும். நீங்கள் ஒரு பார்வையாளர் (visitor) என்றால், நீங்கள் வசிக்கும் நாட்டை கிளிக் செய்ய வேண்டும். மாறாக, அமீரகத்தில் வசிக்கும் குடியிருப்பாளராகவோ அல்லது குடிமகனாகவோ இருந்தால், நீங்கள் வசிக்கும் எமிரேட்டை கிளிக் செய்ய வேண்டும்.

— நீங்கள் எமிரேட்ஸ் குடிமகனாக அல்லது குடியிருப்பாளராக இருந்தால் உங்கள் எமிரேட்ஸ் ஐடி எண்ணை உள்ளிடவும். நீங்கள் பார்வையாளர் என்றால், உங்கள் பாஸ்போர்ட் எண்ணை உள்ளிடவும். அடுத்து, அரபு அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒரு மொழியைத் தேர்வு செய்யவும்.

B. சேவை குறித்த தகவலை உள்ளிடுதல்:

— ‘Application Name’ என்பதைத் தேர்ந்தெடுத்து, அதில் நீங்கள் புகார் அளிக்க விரும்பும் துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, நீங்கள் ரெசிடென்ஸ் அனுமதி மற்றும் நுழைவு விசாக்கள் தொடர்பான புகார் அழிக்கவேண்டுமானால், அந்த எமிரேட்டில் உள்ள வதிவிட மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான (GDRFA) பொது இயக்குநரகத்தைத் தேர்ந்தெடுக்கவும். உதாரணமாக, GDRFA -துபாய்.

— நீங்கள் ‘UAEICP’ மொபைல் ஆப் மூலமாகவோ அல்லது டையிங் சென்டர் மூலமாகவோ விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருந்தால், ‘eChannels’ ஐத் தேர்ந்தெடுக்கலாம். அடுத்தபடியாக, ‘துணை விண்ணப்பத்தை’ உள்ளிடவும்- இதில் புகாரின் வகையை உள்ளிட வேண்டும்.

C. டிக்கெட் விவரங்களை உள்ளிடுதல்:

— சப்ஜெக்ட் அல்லது தலைப்பில் டைப்பிங் செய்து, மெனுவில் உள்ள கேள்வி, புகார் அல்லது பாராட்டு என்ற விருப்பங்களில் இருந்து உங்கள் டிக்கெட் வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் உங்கள் முந்தைய விண்ணப்பத்திற்கான டிக்கெட் எண் அல்லது குறிப்பு எண்ணையும் உள்ளிடலாம்.

படி 2: விவரங்களை உள்ளிட்டு ஆவணங்களைப் பதிவேற்றுதல்

— உங்கள் புகாரின் விவரங்களை உள்ளிட வேண்டும். ஏதேனும் துணை ஆவணங்களை இணைப்பதற்கும் உங்களுக்கு விருப்பம் உள்ளது. அதற்கு ‘Need call back’ என்ற விருப்பமும் உள்ளது. அதன் பிறகு, ‘I’m not a robot captcha’ என்பதைக் கிளிக் செய்து, ‘Create New’ பொத்தானைக் கிளிக் செய்யவும்.

படி 3: புகார் நிலையைக் கண்காணித்தல்

— நீங்கள் மேற்கூறிய படிகளைப் பின்பற்றி ஆன்லைனில் புகார் அளித்ததும், புகார் குறிப்பு எண்ணுடன் கூடிய மின்னஞ்சலைப் பெறுவீர்கள், இது விண்ணப்பத்தின் நிலையைக் கண்காணிக்கப் பயன்படும்.

— உங்கள் புகாரின் நிலையைக் கண்காணிக்க, ‘Track Complaint’ என்பதைக் கிளிக் செய்து டிக்கெட் எண்ணை உள்ளிடவும். நீங்கள் புகார் அளித்து ஐந்து வேலை நாட்களுக்குள் புகாரின் நிலை குறித்த பதிலை மின்னஞ்சல் வாயிலாகப் பெறுவீர்கள்.

ICPல் என்னென்ன சேவைகளை அணுகலாம்?

  1. தலைமறைவு அறிக்கையை (Absconding report) திரும்பப் பெறுதல்
  2. ரெசிடென்சி விசா புதுப்பித்தல் அல்லது வழங்குதல்
  3. மனிதாபிமான வழக்குகள்
  4. பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான கோரிக்கைகள்
  5. ரெசிடென்சி அனுமதிக்கான நிலையை மாற்றுதல்.
  6. விடுப்பு அனுமதி வழங்கல்
  7. எமிரேட்ஸ் ஐடி தகவல் புதுப்பித்தல்
  8. எமிரேட்ஸ் ஐடி வழங்கல் மற்றும் புதுப்பித்தல்
  9. விசா நீட்டிப்பு
  10. அபராதம்
  11. கோல்டன் விசா விண்ணப்பம்
  12. இழந்த/சேதமடைந்த ரெசிடென்ஸ் பெர்மிட்
  13. இழந்த/சேதமடைந்த என்ட்ரி பெர்மிட்
  14. நிறுவனத்திற்கான கார்டை (Establishment Card) வழங்கல் மற்றும் புதுப்பித்தல்
  15. தலைமறைவு புகார்
  16. தலைமறைவு புகாரை அகற்றுதல்

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!