அமீரக செய்திகள்

வெளிநாட்டவர்கள் மகன்களுக்கு ஸ்பான்சர் செய்யும் வயது வரம்பை நீட்டித்த அமீரக அரசு.. விசா சீர்திருத்தத்தால் குடியிருப்பாளர்கள் மகிழ்ச்சி..!!

அமீரக அரசானது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த விசா விதிகளை புதுப்பித்து பல்வேறு புதிய அறிவிப்புகளை ஏப்ரல் 18 ம் தேதி வெளியிட்டது. அமீரக அரசின் இந்த அறிவிப்புகளில் ஒன்றாக அமீரகத்தில் வசிக்கக்கூடிய வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் இனிமேல் தங்கள் மகன்களுக்கு 25 வயது வரை ஸ்பான்சர் செய்யலாம் என்று வயது வரம்பை நீட்டி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் தங்கள் மகன்களுக்கு 18 வயது வரை மட்டுமே ஸ்பான்சர் செய்ய முடியும் என்பதால், 18 வயதிற்கு பிறகு அவர்கள் இங்கே தொடர்ந்து தங்க ஸ்டூடென்ட் விசா அல்லது ஒர்க் பெர்மிட் தேவைப்படும்.

மேலும் இந்தியாவிலோ அல்லது வேறு ஏதேனும் நாட்டிலோ உயர் கல்வி பயின்று வரும் அமீரக குடியிருப்பாளர்களின் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண் பிள்ளைகள், தங்களின் பெற்றோரை காண அமீரகம் வருவதற்கு விசிட் விசாவில் வர வேண்டிய சூழல் இருந்து வந்தது.

ஆனால் தற்போது அமீரக அரசு மகன்களுக்கு ஸ்பான்சர் செய்ய அனுமதிக்கப்படும் வயது வரம்பை 18 லிருந்து 25 ஆக உயர்த்தியிருப்பது அமீரகத்தில் வசிக்கக்கூடிய பெரும்பாலான பெற்றோர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

பெண் பிள்ளைகளை பொறுத்த வரை அவர்களுக்கு திருமணம் ஆகும் வரையிலும் தங்களின் பெற்றோரின் ஸ்பான்சரில் அமீரகத்தில் தொடர்ந்து தங்க அனுமதி உண்டு, அவர்களுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவை நாட்டின் நுழைவு மற்றும் ரெசிடென்சி விசா திட்டத்தில் மிகப்பெரிய சீர்திருத்தங்களை மேற்கொண்டு பல்வேறு புதிய அம்சங்களை வெளியிட்டதில் புதிதாக வேலை விசா, பிசினஸ் விசா, உறவினர்களை காண வருபவர்களுக்கான அனுமதி, தற்காலிக பணிக்காக வருபவர்களுக்கான அனுமதி போன்ற புதிய விசா வகைகளையும் அறிவிதித்தது.

மேலும் 5 வருட கிரீன் விசா, 10 வருட கோல்டன் விசா போன்றவற்றிற்கான தகுதிகளையும், அதற்கான விதிமுறைகளை எளிதாக்கியும் விசா சீர்திருத்தங்களை அமைச்சரவை அறிவித்தது. மேலும் குறிப்பிட்ட விசாவில் அமீரகம் வரும் வெளிநாட்டவர்ளுக்கு இனிமேல் ஸ்பான்சர் தேவையில்லை என்ற அறிவிப்பையும் அமைச்சரவை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:: 5 வருட கிரீன் விசா பெறுவதற்கான தகுதிகளை வெளியிட்ட அமீரக அரசு..!!

மேலும் படிக்க:: கோல்டன் ரெசிடென்சி விசாவிற்கு சலுகைகளை அறிவித்த அமீரக அரசு.. திறமையானவர்களை ஈர்க்கவும், தக்கவைக்கவும் நடவடிக்கை..!!

 

Related Articles

Back to top button
error: Content is protected !!