அமீரக செய்திகள்

அமீரகத்தில் சட்டவிரோதமாக ஆட்சேர்ப்பு செய்த 4 நிறுவனங்கள்.. 50,000 திர்ஹம்ஸ் அபராதம்.. இழுத்து மூடி சீல் வைத்த அமைச்சகம்..!!

அபுதாபி எமிரேட்டிற்கு உட்பட்ட அல் அய்னில் அமீரகத்தின் ரெசிடென்சி மற்றும் வெளிநாட்டினர் விவகாரத் துறை மற்றும் பொருளாதார மேம்பாட்டுத் துறை ஆகியவற்றால் நடத்தப்பட்ட ஆய்வு பிரச்சாரத்தின் போது, சட்டவிரோதமாக ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் பிடிபட்டதாக MoHRE அறிவித்துள்ளது.

மேலும், அல் அய்னில் பிடிபட்ட ஒவ்வொரு நிறுவனங்கள் மீதும் 50,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், பிடிபட்ட நான்கு நிறுவனங்களும் இழுத்து மூடப்பட்டு பொருளாதார மேம்பாட்டுத் துறையால் சீல் வைக்கப்பட்டதாகவும் அமீரகத்தின் மனிதவள அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சட்டவிரோதமாகப் பணியமர்த்திய அலுவலகங்களில் இருக்கும் வீட்டுப் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் விதமாக, அவர்களுக்கு தற்காலிக வீட்டுவசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பணிபுரிய விரும்புபவர்களை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மையங்களுக்கு  மாற்றுவதற்கான நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளாதகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

எனவே, அமைச்சகத்திடம் உரிமம் பெறாமல் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் சேர்வதைத் தவிர்க்குமாறு குடியிருப்பாளர்களை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், https://mohre.gov.ae/ என்ற MoHRE இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலமாக நிறுவனத்தின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளலாம் என்றும் MoHRE கூறியுள்ளது.

அதேபோன்று மனிதவள அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ மொபைல் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்துவதன் மூலமாகவும் ஆட்சேர்ப்பு மையங்கள் அரசிடம் அங்கீகாரம் பெற்றுள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்றும் MoHRE தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், இது போன்ற சட்டவிரோத ஆட்சேர்ப்பு நடைமுறைகள் ஏதேனும் இருந்தால் MoHREவின் அதிகாரப்பூர்வ சேனல்கள் அல்லது 600590000 என்ற பிரத்யேக கால் சென்டரை தொடர்பு கொண்டு புகாரளிக்குமாறும் பொதுமக்களுக்கு மனிதவள அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அமைச்சகத்திடம் இருந்து முறையான உரிமங்களைப் பெறாமல் ஆட்சேர்ப்பு மற்றும் பணியமர்த்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 45 நிறுவனங்களை பப்ளிக் பிராசிக்யூஷனுக்கு (Public Prosecution) பரிந்துரைத்துள்ளதாக மனிதவளம் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!