அமீரக செய்திகள்

UAE: தமிழக அரசு பள்ளி மாணவர்களின் துபாய் கனவு நனவாகுமா..?

கொரோனா காரணமாக கடந்தாண்டு நிறுத்தி வைக்கப்பட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கான வெளிநாடு கல்வி சுற்றுலா விஷயத்தில், கல்வித்துறை இதுவரை எதுவும் தெரிவிக்காததால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன.

இதையடுத்து ஆன்லைன் மூலம் வினாடி – வினா போட்டிகள் நடத்தப்பட்டு, அதிக மதிப்பெண் பெற்ற, 89 பேர் துபாய்க்கு அழைத்து செல்ல தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, பாஸ்போர்ட் பெற்று இயக்குனரகத்தில் சமர்பித்த பின், மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்தது. இதனால், கடந்த கல்வியாண்டு முழுக்க, துபாய் அழைத்து செல்வது பற்றி அறிவிப்பு வெளியாகவில்லை. தற்போது தொற்று பரவல் குறைந்துள்ள நிலையிலும் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு அழைத்து செல்லவதாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இது குறித்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி கூறுகையில், வெளிநாடு கல்வி சுற்றுலா அழைத்து செல்லும் திட்டம் குறித்து, இணை இயக்குனரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருவதால் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று அவர் கூறினார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!