துபாய், ஷார்ஜா உள்ளிட்ட 6 எமிரேட்களில் மெடிக்கல் விசா பரிசோதனைக்கு எங்கு செல்ல வேண்டும்? உங்களுக்கான வழிகாட்டி இதோ…

அமீரகத்தில் வசிப்பவர்களுக்கு விசா புதுப்பித்தல் அல்லது புதிய விசா ஒன்றைப் பெறுதல் என்பது பலருக்கும் மிகப் பெரிய பணியாகத் தோன்றலாம். குறிப்பாக, அதற்கான மருத்துவப் பரிசோதனையைப் பெறும்போது நீங்கள் தங்கியிருக்கும் எமிரேட்டில் உங்களுக்கு அருகில் உள்ள சோதனை மையங்களைக் கண்டறிவது மற்றும் எவ்வளவு செலவாகும் போன்ற விவரங்கள் முழுமையாக தெரியாமலும் இருக்கலாம்.
எனவே, ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் குடியிருப்பாளர்களுக்கு நடைமுறையை எளிதாக்கும் வகையில், எமிரேட்ஸ் ஹெல்த் சர்வீசஸ் தளத்தின் மூலம் பல்வேறு சேவைகளை நெறிப்படுத்தியுள்ளது. அதன்படி, ஏழு எமிரேட்டுகளிலும் உள்ள சோதனை மையங்கள் முதல் உங்களுக்கு எவ்வளவு செலவாகும் என்பது வரை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முழு வழிகாட்டியும் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:
செலவு:
விசாவிற்கான சேவைக் கட்டணம் பழைய மற்றும் புதிய குடியிருப்பாளர்களுக்கு மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
வகை A: இதில் பணியாளர்கள், நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளனர். இதற்கான சேவைக் கட்டணம் 260 திர்ஹம் ஆகும்.
வகை B: இதில் முடி மற்றும் அழகு நிலையங்கள், ஹெல்த் கிளப்புகள் மற்றும் சுகாதார வசதிகளில் பணிபுரியும் ஆண்கள் உள்ளனர். இந்த பிரிவின் கீழ் வருபவர்களுக்கான கட்டணம் 250 திர்ஹம் ஆகும்.
வகை C: இதில் ஆயாக்கள், வீட்டுப் பணியாளர்கள், நர்சரி மற்றும் மழலையர் பள்ளி மேற்பார்வையாளர்கள், முடி மற்றும் அழகு நிலைய ஊழியர்கள் மற்றும் ஹெல்த் கிளப்புகள் மற்றும் சுகாதார வசதிகளில் பணிபுரிபவர்கள் உள்ளனர். இந்த ஊழியர்களுக்கான சேவைக் கட்டணம் 360 திர்ஹம்.
பரிசோதனை முடிவு:
மருத்துவப் பரிசோதனையானது 30 நிமிடங்கள் நீடிக்கும், பொதுவாக குடியிருப்பாளர்கள் தங்கள் அறிக்கை மற்றும் முடிவுகளைப் பெற ஒன்று முதல் இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டும். எனினும் கூடுதல் கட்டண வசதியுடன் சில மணி நேரங்களிலும் தங்களின் மருத்துவ சோதனை முடிவை பெற்றுக்கொள்ளலாம்.
ஏழு எமிரேட்களில் உள்ள பரிசோதனை மையங்கள்:
துபாய்:
- இபின் பதூதா மருத்துவ பரிசோதனை மையம்
- டிராகன் மார்ட் மருத்துவ பரிசோதனை மையம்
- சலா அல் தின் மருத்துவ பரிசோதனை மையம்
- டிகாம் மருத்துவ பரிசோதனை மையம்
- அல் நஹ்தா மருத்துவ பரிசோதனை மையம்
- அல் கபைசி மருத்துவ பரிசோதனை மையம்
- அல் பராஹா ஸ்மார்ட் மருத்துவ பரிசோதனை மையம்
ஷார்ஜா:
- முவைலா ஸ்மார்ட் மருத்துவ பரிசோதனை மையம்
- அல் தாஜ் ஸ்மார்ட் மருத்துவ பரிசோதனை மையம்
- சுலேகா மருத்துவ பரிசோதனை மையம்
- வகா மருத்துவ பரிசோதனை மையம்
- அல்ஷ்ரூக் மருத்துவ பரிசோதனை மையம்
- சஹாரா மருத்துவ பரிசோதனை மையம்
- அல் கிப்ரா மருத்துவ மையம்
- அல் இப்தா மையம் – ரெசிடென்சி ஸ்கிரீனிங்கிற்கான மருத்துவப் பரிசோதனை
அஜ்மான்:
அல் நுஐமியா மருத்துவ பரிசோதனை மையம்
ராஸ் அல் கைமா:
- RAKEZ மருத்துவ பரிசோதனை மையம்
- தஹான் மருத்துவ பரிசோதனை மையம்
உம் அல் குவைன்:
ரெசிடென்சிக்கான அல்மதார் மருத்துவ பரிசோதனை மையம்
புஜைரா:
- அல் அமல் மருத்துவ பரிசோதனை மையம்
- மெனா டவரின் மருத்துவ பரிசோதனை மையம்
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel