அமீரக செய்திகள்

துபாய் இன்டர்நேஷனல் சிட்டி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!! இருவர் காயம்…..

துபாயில் உள்ள இன்டர்நேஷனல் சிட்டி கட்டிடத்தில் நேற்று (சனிக்கிழமை) பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் இன்டர்நேஷனல் சிட்டி பகுதியில் உள்ள நடுத்தர அடுக்கு குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் ஒரு நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துபாய் சிவில் டிஃபென்ஸ் அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்களால் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதேசமயம், குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவர்கள் அனைவரையும் உடனடியாக கட்டிடத்தில் இருந்து வெளியேற்றியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறிய அதிகாரிகள், இதுவரை தீ விபத்துக்கான காரணத்தை வெளியிடவில்லை.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!