அமீரக செய்திகள்

அபுதாபி பிக் டிக்கெட் வாராந்திர டிராவில் 1 மில்லியன் திர்ஹம்ஸ் வென்ற இந்தியர்….

கேரளாவைச் சேர்ந்த விற்பனையாளர் ஒருவர் வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர் 29) ஐக்கிய அரபு அமீரகத்தின் பிக் டிக்கெட் வாராந்திர டிராவில் வென்று 1 மில்லியன் திர்ஹம் ரொக்கப் பரிசை தட்டிச் சென்றுள்ளார்.

நாலுபுரக்கல் கீழத் ஷம்சீர் என்பவர் கேரளாவில் விற்பனையாளராகப் பணியாற்றி வருவதாகவும், சமூக ஊடகங்களில் பிக் டிக்கெட் விளம்பரத்தைப் பார்த்து, தனது நண்பர்கள் இருவருடன் பிக் டிக்கெட் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

தனது வெற்றி குறித்து மனம் திறந்த ஷம்ஷீர், பிக் டிக்கெட்டில் பெரும்பாலான கேரள மக்கள் வென்றதைப் பார்த்ததும் எங்கள் அதிர்ஷ்டத்தை சோதிக்க உத்வேகம் அளித்தது என்று தெரிவித்தார்.

மேலும், ஐந்தாவது முறையாக பிக் டிக்கெட்டுகளை வாங்கியதாகவும், அதில் 1 மில்லியன் திர்ஹம்சை வென்றது ஆச்சரியமளிப்பதாகவும் கூறியுள்ளார். இந்த ரொக்கத் தொகை சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற எங்கள் கனவை நனவாக்க உதவும் என்றும் குறிப்பிட்டார்.

பிக் டிக்கெட் வெளியிட்ட ப்ரோமோஷன் படி, டிசம்பர் மாதம் முழுவதும், டிக்கெட்டுகளை வாங்கும் நபர்களுக்கு டிசம்பர் 31ம் தேதி நடக்கவிருக்கும் நேரடி டிராவில் நுழைவார்கள் என்றும் இதில் வெற்றி பெறும் நபருக்கு 20 மில்லியன் திர்ஹம் ரொக்கப் பரிசுடன் வெளியேறும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் பிக் டிக்கெட் வாடிக்கையாளர்களும் வாராந்திர இ- டிராவில் தானாக நுழைவார்கள், அங்கு ஒரு வாடிக்கையாளர் ஒவ்வொரு வாரமும் 1 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!