Uncategorized

துபாய்: முக்கிய சாலைகள் படிப்படியாக மூடல்.. மாற்று வழிகளை பயன்படுத்த RTA அறிவுரை..!!

துபாயில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் படுபயங்கரமாக தயாராகி வரும் நிலையில் புர்ஜ் கலீஃபாவில் நடக்கவிருக்கும் பிரம்மாண்ட வான வேடிக்கை நிகழ்வுகளுக்காக அப்பகுதி முழுவதும் இன்று மதியம் முதலே பரபரப்பாகி வருகிறது.

அப்பகுதியில் போக்குவரத்து அதிகமாகும் என்பதால் பொதுவாகவே இந்த நாளில் குறிப்பிட்ட சாலைகள் படிப்படியாக மூடப்பட்டு வரும். அதே போல் இந்த வருடமும் நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மாலையில் இருந்தே சாலை போக்குவரத்து நெரிசல் அதிகமாகி காணப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சில மணி நேரங்கள் முன்பாக அல் அசாயல் ஸ்ட்ரீட் மற்றும் புர்ஜ் கலீஃபா ஸ்ட்ரீட்களை மூடுவதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் அறிவித்திருந்தது. மேலும் இது குறித்த அறிவிப்பில் “உங்கள் இலக்கை எளிதில் அடைய, மாற்று சாலைகளைப் பயன்படுத்தவும்” என்றும் கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து தற்பொழுது புர்ஜ் கலிஃபா / துபாய் மால் மெட்ரோ நிலையம் மூடப்பட்டுள்ளதாக சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. “உங்கள் இலக்குகளை அடைய ஃபைனான்சியல் சென்டர், பிஸ்னஸ் பே, எமிரேட்ஸ் டவர்ஸ் மற்றும் வேர்ல்டு டிரேடு சென்டர் மெட்ரோ நிலையங்களைப் பயன்படுத்தலாம்” என்று போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டுள்ளது. மேலும் ஷேக் முகமது பின் ரஷித் Blvd மூடப்படுவதாகவும் அறிவித்துள்ளது. 

Related Articles

Back to top button
error: Content is protected !!