அமீரக செய்திகள்

அபுதாபி, துபாயை அடுத்து அஜ்மானிலும் அமலுக்கு வரும் பிளாஸ்டிக் தடை….

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு பல்வேறு எமிரேட்டுகளில் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது அஜ்மான் எமிரேட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முனிசிபாலிட்டி மற்றும் திட்டமிடல் துறை (Municipality and Planning Department) அதன் சமூக ஊடக சேனல்களில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2022 ஆம் ஆண்டின் அமைச்சர்களின் முடிவு எண். 380 இன் படி, மற்றும் ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை தொடர்பான 2018 ஆம் ஆண்டின் மத்திய சட்ட எண். 2 க்கு இணங்க, ஐக்கிய அரபு அமீரகத்தை பிளாஸ்டிக் பைகளில் இருந்து விடுவிக்கும் நோக்கில் அஜ்மான் எமிரேட்டில் உள்ள அனைத்து ஷாப்பிங் சென்டர்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு நடப்பு ஆண்டு ஜனவரி 2024 முதல் அமலுக்கு வரும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 80070 என்ற அவசர தொலைபேசி எண்ணிற்கு அழைப்பதன் மூலம் சம்பந்தப்பட்ட விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என துறை தெரிவித்துள்ளது.

அஜ்மான் மட்டுமின்றி, துபாய், ராஸ் அல் கைமா மற்றும் உம் அல் குவைன் உள்ளிட்ட எமிரேட்களிலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜூன் 2022 இல் அபுதாபி எமிரேட்டில் இந்த பைகளுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!