துபாய், ஷார்ஜா இடையே பயணிக்க போக்குவரத்து வசதிகள்: விரைவான மற்றும் மலிவான போக்குவரத்து விருப்பங்களுக்கான முழுவிபரங்களும்…

உங்களிடம் சொந்தமாக வாகனம் இல்லையா? துபாய் மற்றும் ஷார்ஜா இடையே பயணம் செய்ய விரைவான மற்றும் செலவு குறைந்த போக்குவரத்து முறை எது என்று தெரியவில்லையா? உங்களுக்கான வழிகாட்டி பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:
இரண்டு பரபரப்பான நகரங்களுக்கு இடையே வேலைக்காக தினசரி பயணம் செய்பவர்கள் மலிவான போக்குவரத்தை தேடினால் பேருந்துகள் சிறந்ததாகும்.
துபாய் -ஷார்ஜா இடையே வெவ்வேறு இடங்களில் இருந்து பல பேருந்து சேவைகள் RTA ஆல் வழங்கப்படுகிறது. மிகவும் பொதுவான பேருந்து சேவைகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
துபாய்-ஷார்ஜா:
- E301 – ஷபாப் அல் அஹ்லி (U6) இலிருந்து ஷார்ஜா, அல் தாவுன் (V5)
- E303 – யூனியன் (T4) இலிருந்து ஷார்ஜா, அல் ஜுபைல் (W5)
- E303A – அல் சப்கா (S4) இலிருந்து ஷார்ஜா, அல் ஜுபைல் (W5)
- E304 – அல் சத்வா (P4) இலிருந்து ஷார்ஜா, அல் ஜுபைல் (W5)
- E306 – அல் குபைபா (R3) இலிருந்து ஷார்ஜா, அல் ஜுபைல் (W5)
- E307 – தேரா சிட்டி சென்டரில் (S5) இருந்து ஷார்ஜா, அல் ஜுபைல் (W5)
- E307A – அபு ஹைல் (T5) இலிருந்து ஷார்ஜா, அல் ஜுபைல் (W5)
- E311 – ரஷிதியா (T8) இலிருந்து ஷார்ஜா, அல் ஜுபைல் (W5)
- E315 – Etisalat (U8) இலிருந்து ஷார்ஜா, அல் முவைலா (W8)
- E316 – ரஷிதியா (T8) இலிருந்து ஷார்ஜா அல் நோஃப் (W9)
ஷார்ஜா-துபாய்:
- E303 – அல் ஜுபைலில் இருந்து துபாய், யூனியன் ஸ்கொயர்
- E306 – அல் ஜுபைலில் இருந்து துபாய், அல் குபைபா வரை
- E307 – அல் ஜுபைலில் இருந்து துபாய் வரை, தேரா சிட்டி சென்டர்
- E307A – அல் ஜுபைலில் இருந்து துபாய் வரை, அபு ஹைல் மெட்ரோ நிலையம்
- E315 – முவைலேயிலிருந்து துபாய் வரை, எடிசலாட் மெட்ரோ நிலையம்
- 308 – ரோல்லாவிலிருந்து துபாய், ஜபெல் அலி, இபின் பதூதா பஸ் ஸ்டேஷன்
- 309 – ரோலாவிலிருந்து துபாய் வரை, இண்டர்சேஞ்ச் 4
- 313 – ரோலாவிலிருந்து துபாய் வரை, ஏர்போர்ட் டெர்மினல் 2
- 113 – ரோலாவிலிருந்து துபாய் வரை, ரஷிதியா பஸ் ஸ்டேஷன்
டாக்ஸி:
RTA இரண்டு எமிரேட்களுக்கு இடையே தனது டாக்ஸி சேவையை வழங்குகிறது. இரண்டு நகரங்களுக்கு இடையே டாக்ஸியில் பயணிக்கும் போது 20 திர்ஹம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். அதே கூடுதல் கட்டணத்துடன் ஷார்ஜாவின் போக்குவரத்து ஆணையமான SRTA துபாய்க்கு இதே போன்ற டாக்ஸி சேவையை வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நீங்கள் Careem மற்றும் Uber போன்ற சேவைகளை அணுகுவது சிறந்தது, ஏனெனில் அவை அனைத்து வகையான பயணிகளின் தேவைகளுக்கு ஏற்றவாறு சாதாரணம் முதல் ஆடம்பரம் வரை பல விருப்பங்களை வழங்குகின்றன.
ஃபெர்ரி:
நீங்கள் எமிரேட்டின் அழகியல் தோற்றத்தை ரசித்தவாறே பயணிக்க விரும்பினால், RTA இன் ஃபெர்ரி சேவையை துபாய் மற்றும் ஷார்ஜா இடையே அல் குபைபாவிலிருந்து ஷார்ஜா அக்வாரியம் (FR5) வரை இயங்கும் ஃபெர்ரி மூலம் அனுபவிக்கலாம்.
கட்டணம்: ஒரு வழி பயணத்திற்கு 15 திர்ஹம் (சில்வர் கார்டு) மற்றும் 25 திர்ஹம் (கோல்டு).
ஷட்டில் பஸ்:
துபாய் மற்றும் ஷார்ஜா சர்வதேச விமான நிலையங்கள் இரண்டும் ஒவ்வொரு எமிரேட்டுக்கும் ஷட்டில் பஸ் சர்வீஸ்களை வழங்குகின்றன. இது நீங்கள் நாட்டிற்குள் இறங்கிய பிறகு அல்லது நாட்டை விட்டு வெளியேறிய பிறகு மற்ற நகரத்தை அடைய விரைவான மற்றும் மலிவான வழியாகும்.
குறிப்பாக, ஏர் அரேபியா ஷார்ஜா விமான நிலையத்திலிருந்து அபுதாபி, துபாய், அல் அய்ன் மற்றும் ராஸ் அல் கைமா ஆகிய இடங்களுக்கு ஷட்டில் பஸ்களை இயக்குகிறது. ஒரு பயணத்திற்கு 20 திர்ஹம் செலவாகும்.
அதுமட்டுமில்லாமல், எண்ணற்ற தனியார் பேருந்து சேவைகள் மற்றும் சுற்றுலா ஏஜென்சிகள் துபாய் விமான நிலையத்திலிருந்து ஷார்ஜாவிற்கு போக்குவரத்தை வழங்குகின்றன.
வாடகைக்கு வாகனம்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏராளமான கார் வாடகை (rent a car) விருப்பங்கள் உள்ளன. நீங்கள் விரைவாக செல்ல விரும்பினால், எமிரேட்ஸ் முழுவதும் உள்ள வாடகை இடங்கள் உங்களுக்கு வாகனங்களை வழங்குகின்றன. வாடிக்கையாளர்கள் Udrive மற்றும் Ekar போன்ற ஆன்லைன் தளங்களிலும் விரைவிலேயே கார்களை வாடகைக்கு எடுக்க முடியும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel